கிளாம்பாக்கத்தில் யாரு? தாம்பரம், செங்கல்பட்டு பலே டீம்.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு கவலை இனி இல்லை
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் முனையம் தொடர்பான, கூடுதல் வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்தவகையில், மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
கடந்த வருடமே திறந்திருக்க வேண்டிய கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு, இப்போதுதான் திறக்கப்பட்டுள்ளது.. இந்த இடைப்பட்ட காலத்தில், பஸ் ஸ்டாண்டில் சீரமைப்பு மற்றும் வடிகால் வசதி பணிகள் மும்முரமாக நடந்து வந்தன..

ஆனாலும் முழுமையான வசதிகள் இந்த ஸ்டாண்டில் அமைக்கப்படவில்லை என்றும், மேலும் சில வசதிகளை செய்துதர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். முக்கியமாக, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலேயே பயணிகள் இறங்கி, பஸ்கள் வழியாக மட்டுமே சென்னைக்குள் வர முடியும் என்பதால், இணைப்பு போக்குவரத்து தேவை என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஸ்கைவாக்: இதனிடையே, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. அதேபோல, கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் வரை 450 மீட்டர் தூரம் ஸ்கைவாக் அமைக்கப்படும் என்று சொல்லி உள்ளதால், அது சம்பந்தமான பணிகளும் நடந்து வருகின்றன.. இன்னொரு பக்கம் மெட்ரோ பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
இதற்குநடுவில், இந்த மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழு செயல்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் சிவசங்கர் பெருத்த நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்..
பணிகள்: இப்படிப்பட்ட சூழலில், கிளாம்பாக்கத்தில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும (CMDA)உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் இந்த வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தாம்பரம் மாநகராட்சி காவல் ஆணையர், செங்கல்பட்டு ஆட்சியர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கான உத்தரவை தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி கிளாம்பாக்கம் பேருந்து முனைய வழிகாட்டுதல் குழு, பேருந்துகளின் இயக்கம், செயல்பாடுகளை கண்காணித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த அதிரடி: ஏற்கனவே, கிளாம்பாக்கம் மற்றும் குந்தம்பாக்கம் பேருந்து நிலையங்களை நிர்வகிக்க, சென்னை நில நிர்வாக ஆணையரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்த ஜெ. பார்த்திபன், தலைமை நிர்வாக அலுவலராக நியமித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டிருந்த நிலையில், அடுத்த அதிரடி இப்போது கையில் எடுக்கப்பட்டிருக்கிறது..
பேருந்துகளின் இயக்கம், செயல்பாடுகள் குறித்து இந்த குழு, இனிமேல் நேரடியாகவே கண்காணிக்க போவது, பொதுமக்கள் தரப்பில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications