கிளாம்பாக்கம்.. என்னென்ன வசதிகள்.. பிளாஸ்டிக்-இல்லா முனையமாக செயல்பட சிவ் தாஸ் மீனா உத்தரவு
சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை பிளாஸ்டிக்-இல்லா முனையமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் தினந்தோறும் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்னைகளை ஒருங்கிணைக்க, ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்க தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
விமான நிலையம் போல கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டிருந்தாலும் மக்கள் சென்னைக்குள் வர சிரமப்படுகின்றனர். மெட்ரோ ரயில் சேவை, புறநகர் ரயில் சேவை ஆகியவை இன்னும் ஏற்படுத்தித் தரப்படாத நிலையில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், மேம்படுத்த வேண்டிய வசதிகள் ஆகியவை குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பேருந்து முனையத்தில் பயணிகளுக்கு போதுமான தகவல் வழங்குதல், பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குதல், போக்குவரத்து விதிமுறைகள், பேருந்து முனையத்தில் சுகாதாரம், பயணிகளை பிரதான முனையத்திலிருந்து MTC முனையத்திற்கு மாற்றுதல் மற்றும் சிறந்த வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பயணிகளின் வசதிகளை வழங்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஒவ்வொரு துறையினரும் தெரிவித்தனர். மேலும் இப்பேருந்து முனையத்தை பிளாஸ்டிக்-இல்லா முனையமாக செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை நிர்வகிக்க மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் புதிய பணியிடத்தை உருவாக்கவும், அந்த மாவட்ட வருவாய் அலுவலருக்கு துணையாக துணை ஆட்சியர்கள் மற்றும் பேருந்து முனையத்தில் நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் பணியாளர்களைக் கொண்டு குத்தம்பாக்கம் மற்றும் மாதவரத்தில் உள்ள பிற முனையங்களையும் நிர்வகிக்க பணிகளில் ஈடுபடுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்ட பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்கு, வண்டலூர் மற்றும் ஐயனஞ்சேரி சாலை சந்திப்பு மேம்பாடு ஏற்படுத்துதல், வண்டலூர் ரயில்வே சந்திப்புக்கு தற்போதுள்ள சேவைகளுடன் கூடுதலாக பேருந்து சேவைகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் தொடர்பான தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் அனைத்து பணிகளையும் முடிக்குமாறு சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலருக்கு சிவ் தாஸ் மீனா, உத்தரவிட்டார்.
தைப் பொங்கலுக்குப் பிறகு TNSTC மற்றும் ஆம்னி பேருந்துகளின் இயக்கங்களை மாற்றவும், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முழுத்திறனுடன் செயல்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார் சிவ் தாஸ் மீனா.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications