கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி ரோடில் சூப்பர் மாற்றம்! சென்னை பஸ் ஸ்டாண்ட் ரூ.79 கோடி பிரம்மாண்ட ஆகாய அதிசயம்
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் பிரம்மாண்ட ஆகாய நடைபாதை, பயணிகளின் பயண நேரத்தை மிச்சப்படுத்தி பாதுகாப்பான போக்குவரத்து சேவையை வழங்க ரூ.79 கோடியில் தயாராகி வருகிறது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாகும் இந்தப் பாதை, தென்மாவட்ட பயணிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஒரு மைல்கல்லாக அமையவுள்ளது.
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்குப் பேருந்து சேவையை எளிதாக்கவும் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அமைக்கப்பட்டது.

3 பிளாட்பார்ம்கள்
நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து செல்லும் இந்த முனையத்திற்குச் செல்வதில்,
தொடக்கத்தில் பல்வேறு சவால்கள் நிலவின.. குறிப்பாக, சென்னை மாநகரின் மையப்பகுதியிலிருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கு போகவே, ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக செலவிட வேண்டிய சூழல் இருந்தது..
கிளாம்பாக்கம் பஸ் முனையத்திற்கு அருகிலேயே ரயில் பாதை இருந்தும் ரயில் நிலையம் இல்லாததால், பயணிகள் வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்தில் இறங்கி கூடுதல் செலவில் பேருந்து நிலையத்தை அடைய வேண்டிய நிலை இருந்தது. இந்த இன்னலைப் போக்க 3 நவீன பிளாட்பார்ம்களுடன் கூடிய இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பிரம்மாண்ட நடைபாலம்
தற்போது ரயில்வே தரப்பிலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில், பேருந்து முனையத்தையும் ரயில் நிலையத்தையும் இணைக்கும் பிரம்மாண்ட ஸ்கைவாக் அதாவது நடைப்பாலம் அமைக்கும் பணிகள் சிஎம்டிஏ மூலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக லிப்ட் வசதிகளுடன் தயாராகி வரும் இந்த நிலையம், இம்மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பஸ் ஸ்டாண்டுக்கும், கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையே ஜி.எஸ்.டி சாலையைக் கடப்பதில் பயணிகள் பெரும் சிரமங்களை சந்தித்தனர்.
ரூ.79 கோடி அதிருப்தி சிக்கல்?
இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வாகவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சுமார் 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட ஆகாய நடைபாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 279 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்ட இந்த வான்வழிப் பாதை, நவீன வசதிகளுடன் ஒரு தொழில்நுட்ப அதிசயமாய் உருவெடுத்துள்ளது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, பயணிகள் நெரிசல் மிகுந்த ஜி.எஸ்.டி சாலையைக் கடக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நம்பப்படுகிறது..
வரப்பிரசாதம்
குறிப்பாக, ரயில் நிலையத்திலிருந்து இறங்கி, பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கனமான உடமைகளுடன் வரும் பயணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும். பயணிகளின் சிரமத்தைக் குறைக்க 6 நகரும் படிக்கட்டுகள் அதாவது எஸ்கலேட்டர்கள், 4 லிஃப்ட்டுகள், மற்றும் வழுக்காத தரைத்தளம் எனப் பன்னாட்டுத் தரத்திலான வசதிகள் இதில் இடம்பெறுகின்றன. இது வெறும் நடைபாதை மட்டுமல்ல, பயண நேரத்தை மிச்சப்படுத்தி மன நிம்மதியைத் தரும் ஒரு பாலமாகும்.
சமீபத்தில் இந்த நடைபாதையின் தளம் தாழ்வாக இருப்பதால் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் எழுந்தன.. ஆனால், அதனை சி.எம்.டி.ஏ அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
சூப்பர் வசதிகள்
ஐஐடி மெட்ராஸின் 'கியூப்' (CUBE ) அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனையின் படியே அனைத்துப் பணிகளும் மிகவும் துல்லியமாக நடைபெற்று வருவதாகவும், இதில் எந்தவிதத் தொழில்நுட்பக் குறைபாடுகளும் இல்லை என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
கட்டுமானப் பணிகள் தற்போது இறுதி நிலையை எட்டியுள்ள சூழலில், மார்ச் மாத இறுதியில் இந்தப் பாதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, கிளாம்பாக்கம் முனையம் ஒரு முழுமையான ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக மாறுவதுடன், பயணிகளுக்கும் பெரும் வசதியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது...!!
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications