கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் "புதுஸா" கிளம்பியிருக்கே.. நீங்க பாத்தீங்களா.. கியரை மாற்றிய அரசு: செம
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு எப்போது திறக்கப்படும் என்ற ஆவல் வட்டமடித்து வரும்நிலையில், அதுகுறித்து ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.
சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 393 கோடி செலவில் சிஎம்டிஏ-வால் கட்டப்பட்டு வரும் பேருந்து முனையம் தயாராகி உள்ளது.. பிரமாண்டமான முறையில் இந்த கட்டுமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே ஆம்னி பஸ்நிலையம் அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
வண்டலூர்: பணிகள் முழுவதுமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.. எப்படியும் ஜூலை மாதத்துக்குள் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று செய்திகள் பரபரத்தன. ஆனால், அதற்குள் 2 விதமான பிரச்சனைகள் கிளாம்பாக்கத்தை சூழ்ந்தன.. சென்னையில் அடுத்த பெய்த மழை காரணமாக, இந்த பஸ் ஸ்டாண்டுக்குள் மழைநீர் புகுந்துவிட்டன..

மேலும், இந்த புது பஸ்ஸ்டாண்டை சுற்றிலும் தண்ணீர் தேங்கிவிடுவதால், ஒவ்வொருமுறையும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மிகவும் சிரமப்பட்டு, தண்ணீரில் வண்டிகளை தள்ளிக்கொண்டே வரவேண்டியதாகிவிடுகிறது.. மேலும், மழைநீரில் தத்தளிக்கும் வாகனங்களின் வீடியோக்களும் போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பின.
அறிவுறுத்தல்: எனவே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்துள்ள அமைச்சர் சேகர்பாபு, இந்த பேருந்து நிறுத்தம் திறக்கப்பட்டவுடன் ஏற்படக்கூடிய செயல்பாட்டு சிக்கல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பஸ் ஸ்டாண்டுக்குள், 24 மணி நேரமும் குடிநீர், மின்சாரம் தடை படாமல் இருக்க வேண்டும் என்பதுடன், பஸ் ஸ்டாண்டுக்குள் மழைநீர் தேங்காமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அதிகாரிகளிடம் விவாதித்தபடியே வருகிறார்..
அடுத்த பிரச்சனை: மற்றொருபுறம், ஆம்னி பஸ் தரப்பில் இன்னொரு பிரச்சனையை கிளப்புகிறார்கள்.. அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றொரு சங்கத் தலைவர் அன்பழகன், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்..
அந்த கடிதத்தில், "திறக்கப்படவுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலோ, அதன் அருகிலோ ஆம்னி பேருந்துகளுக்கு குறைந்தளவு 500 நிறுத்தங்கள் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும். அதன்பிறகு, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தை முற்றிலும் காலி செய்து கிளாம்பாக்கத்துக்கு மாற்றலாம் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். ஆனால், இது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று தெரியவில்லை.
இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு, தள்ளிப்போகும் என்ற தகவல் வெளியாகி வருகிறது.. காரணம், இந்த பஸ் ஸ்டாண்டு பகுதியில், மழைநீர் தேங்குவதால் வடிகால் கட்டும் பணிகள் துரிதமாகி உள்ளதாம்..
சாலைப்பணி: அதேபோல, பஸ்கள், எளிதாக சென்று வரும் வகையில் கிளாம்பாக்கத்தை சுற்றி சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.. இந்த பணிகள் எல்லாம் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேங்கும் நீரை மறுபுறம் கொண்டு செல்ல ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே குழாய் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பஸ்நிலையத்தின் முன்பகுதியிலும் பஸ்கள் செல்ல சாலைப்பணி இன்னும் முழுமையாக முடியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது... அதேபோல, பஸ்நிலைய மேற்கூரை பணிகள், பயணிகள் வந்து தங்குவதற்கான தங்குமிடம், உணவகம், கடைகள் பணிகளும் நிறைவடையாமல் இருக்கிறது.
டோல்கேட் கட்டணம்: இதைத்தவிர, ஆம்னி பஸ் நிறுத்தத்திற்கான இடத்தை படப்பை அருகில் தேர்வு செய்து இருந்தனர். அந்த இடத்தை ஆய்வு செய்தபோது ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரும்போதும், பயணிகளை ஏற்றி சென்று மறுபடியும் செல்லும்போதும் அந்த வாகனம் இரண்டு முறை டோல்கேட்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் நிலை உள்ளது. அதனால், ஆம்னி பஸ் நிலைய இடத்தையும் கைவிட்டு விட்டார்களாம்.. எனவே, ஆம்னி பஸ்களுக்கான இடத்தையும் ஆய்வு செய்து கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள்..
இத்தனை பணிகளும். இந்த மாதத்திற்குள் முடித்துவிட முடியாது என்பதால்தான், கிளாம்பாக்கம் பஸ்நிலைய திறப்பு தள்ளிப்போகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications