கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு ஜவ்வு மாதிரி இழுழுக்குதே.. புதுஸா முளைத்த சிக்கல்.. ரிப்போர்ட் போயாச்சாமே
சென்னை: கிளாம்பாக்கத்தில் அடுத்தடுத்த சிக்கல்கள் கிளம்பி கொண்டிருக்கின்றன.. இதோ இன்னொரு சிக்கல் முளைத்துள்ளதால், பஸ் ஸ்டாண்டு திறப்பது இன்னும் தள்ளிபோகும் போல தெரிகிறது.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு இன்னும் திறக்கப்படவில்லை.. இப்போதைக்கு திறக்கப்படும் சூழலும் இல்லை என்றே தெரிகிறது.. கட்டுமானப்பணிகள் மொத்ததும் முடிந்து திறப்புவிழாவுக்கு தயாரானபோதுதான், மழை நேரத்தில் பஸ் ஸ்டாண்டு முழுக்க தண்ணீர் தேங்கி நிற்பது தெரியவந்துள்ளது. இதற்கு பிறகுதான், கால்வாய் அமைக்கும் பணி துரிதமாக ஆரம்பமாகி உள்ளது..

வடிகால் வசதி: கிளாம்பாக்கத்தில் வடிகால் வசதி பணிகள் நடந்து கொண்டிருப்பதால், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போயுள்ளது.. இந்நிலையில், தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்திருந்தனர்.. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் தோ.வில்சன், பொதுச்செயலாளர் பா.ஜான்ஸிராணி ஆகியோர் வெளியிட்டிருந்த அறிக்கை இதுதான்:
"சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது. இப்புதிய பேருந்து நிலையம் மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்க அரசு முயற்சிகள் எடுத்துள்ளதை அறிகிறோம். எனினும், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் முழுமையாக பயன்படுத்த ஏற்றதாக உருவாக்கப்படவில்லை என தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மாற்று திறனாளிகள்: குறிப்பாக, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொட்டுணர்ந்து செல்லும் தரை அனைத்து இடங்களுக்கும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்றும், செவி மற்றும் பேசும் திறன் பாதித்த மாற்றுத் திறனாளிகள் அறியும் வகையில் காட்சி அறிவிப்பு எல்லா இடங்களிலும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுதவிர, கடுமையாக பாதித்த மாற்றுத் திறனாளிகள் இயன்ற அளவில் பேருந்துகளின் அருகாமையில் சென்று வாகனங்களை நிறுத்த தனி வசதி இல்லை என்றும் தெரிகிறது.
உரிய வசதிகள்: எனவே, அனைத்து துறை அதிகாரிகளை கொண்டு விரைவில் முழுமையான ஆய்வு செய்ய வேண்டும். மேலும், சட்ட விதிகளின்படி உரிய வசதிகளை இப்புதிய பேருந்து நிலையத்தில் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
ஒரு பேருந்து நிலையம் அமைக்கப்படும்போது, மாற்று திறனாளிகள் அதனை எளிதாக பயன்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும் என்பது ஹைகோர்ட்டின் உத்தரவும்கூட.. அந்தவகையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில், மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆய்வு மேற்கொண்டபோதுதான், சில குறைகள் கண்டறியப்பட்டன.
சாய்தளங்கள்: அதன்படி, பஸ் ஸ்டாண்டிற்குள் தரைப்பகுதியில் மேடு, பள்ளங்கள் காணப்படுவதாகவும், பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகள் தொட்டு உணரக்கூடிய வழிகள் எதுவும் பிரத்யேகமாக அமைக்கப்படவில்லை என்றும், பெரிய அளவிலான சாய்தளங்கள் உள்ளதால், சக்கர நாற்காலியை எளிதாக பயன்படுத்தாக முடியாத நிலை உள்ளது என்றும் பிரெய்லி எழுத்துக்களும் எங்குமே பொறிக்கப்படவில்லை என்றும் கண்டறிந்தள்ளனர்.
இவ்வளவு செலவு செய்தும், மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கியத்துவம் எதுவுமே இல்லையே என்ற அதிருப்தியும் வெடித்தது இவையெல்லாம் ஒரு அறிக்கையாக சிஎம்டிஏ அதிகாரிகளிடம் அறிக்கையாகவும் சமர்த்திருக்கிறார்கள்.
எனவே, இந்த பணிகள் குறித்தும், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பஸ் ஸ்டாண்டு திறப்பதில் தாமதம் உள்ள நிலையில், புதிதாக இந்த சிக்கலும் முளைத்துள்ளது.












Click it and Unblock the Notifications