கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுல பாத்தீங்களா.. வீடியோ வேற வந்துடுச்சு.. இப்பவேவா.. கவனம் பெறும் வண்டலூர்
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பகுதியின் போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அத்துடன், இது தொடர்பான முக்கிய வேண்டுகோளும் எழுந்துள்ளது.
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 393 கோடி செலவில் சிஎம்டிஏ-வால் கட்டப்பட்டு வரும் பேருந்து முனையம் தயாராகி உள்ளது.. பிரமாண்டமான முறையில் இந்த கட்டுமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வண்டலூர்: பணிகள் முழுவதுமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.. எப்படியும் ஜூலை மாதத்துக்குள் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று தெரிகிறது.. இதனிடையே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்துள்ள அமைச்சர் சேகர்பாபு, இந்த பேருந்து நிறுத்தம் திறக்கப்பட்டவுடன் ஏற்படக்கூடிய செயல்பாட்டு சிக்கல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், 10 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது.. பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், மறைமலை நகர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் கிட்டத்தட்ட 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால், கிளம்பாக்கம் புது பஸ் ஸ்டாண்டு முன்பு, மழை நீர் தேங்கி நின்றுவிட்டது.. இதனால் வாகன ஓட்டிகளால் அந்த இடத்தை கடந்து செல்லவே முடியவில்லை..
மிகவும் சிரமப்பட்டு, தண்ணீரில் வண்டிகளை தள்ளிக்கொண்டே வந்தனர்.. இந்த போட்டோக்களும், வீடியோவும் இணையத்திலும் வெளியாகி உள்ளது.. இப்படி ஒரு பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து இதுகுறித்த நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டார்..
மழைநீர்: பஸ் ஸ்டாண்டுக்குள், 24 மணி நேரமும் குடிநீர், மின்சாரம் தடை படாமல் இருக்க வேண்டும் என்பதுடன், பஸ் ஸ்டாண்டுக்குள் மழைநீர் தேங்காமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அதிகாரிகளிடம் விவாதித்துள்ளார்.. எனினும் தண்ணீர் அதிகம் தேங்கிநிற்பது தொடர்கதையாகி வருகிறது.. பருவமழை தற்போது துவங்கிவிட்டதால், இந்த கலக்கம் இன்னும் அதிகமாகவே, அந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.. எனவே, இதுகுறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.
பஸ் ஸ்டாண்டு: இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்று முன்தினம் மறுபடியும் மழை கொட்டியது.. மழை பெய்த கொஞ்ச நேரத்திலேயே, பேருந்து நிலையம் அருகே தண்ணீர் தேங்க ஆரம்பித்துவிட்டது.
இதனால், போக்குவரத்து வெகுவாகவே பாதிக்கப்பட்டது.. இந்த முறை, சென்னையை தவிர, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில்தான், மழை வெளுத்து வாங்கியது.. வழக்கமாகவே, தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையில் மழை நீர் தேக்கம் அதிக அளவில் காணப்படும் நிலையில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் நர் தேங்கிவிடுகிறது..
போட்டோக்கள்: இனி அடுத்தடுத்த நாட்களில் மழை கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.. எனவே, இந்த கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு அருகே சாலையில் மழைநீர் தேங்காத வண்ணம், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
பஸ் ஸ்டாண்டுக்குள்ளிருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதும், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களுடன் தடுமாறி நிற்பது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் அந்த பகுதி மக்கள்.












Click it and Unblock the Notifications