சென்னைக்கு பெரிய குட்நியூஸ்.. வெளியூர் போகும் மக்களுக்கு நிம்மதி! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் சென்னையில் அகலமான சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. முன்பே திறக்கப்பட வேண்டிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.

ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
ஜெயலலிதா மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் முறையாக திட்டமிட்டு கட்டப்படவில்லை. சென்னையில் இருந்து 30 கிமீ தூரத்தில் பேருந்து நிலையம் இருக்கிறது. இங்கே மெட்ரோ இல்லை. புறநகர் ரயில் இல்லை.
இதனால் மக்கள் இங்கிருந்து சென்னைக்கு உள்ளே வருவது கடினமான வேலையாக இருக்கிறது. இங்கே பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்ட போதே அதை முறையாக திட்டமிடாமல் விட்டுவிட்டனர். அதன் காரணமாகவே தற்போது இங்கே மாற்றங்களை செய்து வருகின்றனர்.
இங்கே கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளை சரி செய்து மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றி வருவதாக ஆளும் திமுக அரசும் தெரிவித்து உள்ளது. உள்ளே இரண்டு மாடி.. மக்கள் செல்ல நவீன நகரும் தரைத்தளம், அதுபோக எஸ்கலேட்டர் என்று பல சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளனர்.
சர்வதேச நாடுகளில் இருக்கும் வகையில் உலக தரத்துடன் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் சென்னையில் அகலமான சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஏற்கனவே உள்ள சாலையை விரிவாக்கம் செய்வதற்கான செலவை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஏற்க ஒப்புக்கொண்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையில் இருந்து மொத்தம் 1.2 கிலோமீட்டர் நீளத்திற்கு அய்யஞ்சேரி முதல் மீனாச்சிபுரம் வரை சாலையை விரிவுபடுத்துவதற்கு சிஎம்டிஏ ரூ.7.56 கோடி செலவு செய்வதாக முடிவு செய்துள்ளது.
மாநில நெடுஞ்சாலை துறை சார்பாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். இங்கேதான் ஆம்னி பேருந்துகளும் நிறுத்தப்பட உள்ளன. அதனால் இங்கே பேருந்துகளை கொண்டு செல்வது கடினம். கடுமையான போக்குவரத்து நேரில் இங்கே ஏற்படும். அதை தடுப்பதற்காக இங்கே இரண்டு லேன் ரோடு அமைக்கப்படும்.
தற்போது வெறும் ஒரு லேன் ரோடு மட்டுமே உள்ளது. அதை இந்த பேருந்து நிலையத்தை திறக்கும் முன் மாற்றி இரண்டு லேன் ரோடு ஆக மாற்ற முடிவு செய்துள்ளனர். இந்த திட்டப்படி மாடம்பாக்கம் முதல் மண்ணிவாக்கம் வரையிலான 7 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படும். கண்டிகை முதல் கூடுவாஞ்சேரி வரையிலான 18 கிலோமீட்டர் சாலையும் அகலப்படுத்தப்படும். நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் வரையிலான ஜிஎஸ்டி சாலை விரிவாக்கம் செய்யப்படும்.
அதேபோல் கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா அமைக்க வேண்டும். கிளாம்பாக்கத்தில் பணிகளை ஜூலை மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் சாலை போடும் பணிகள் தொடங்கி உள்ளது. இதனால் அங்கே மேலும் 2 மாதத்திற்கு பணிகள் நடக்கும். ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில்.. பெரும்பாலும் தீபாவளிக்கு முன் இந்த சாலைகள் கட்டப்பட்டு பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications