Kilambakkam Skywalk: கிளாம்பாக்கம் ஸ்கைவாக் லேட் ஆக இதான் காரணமா? பயணிகளுக்கு இடி போல வந்த தகவல்! எப்போது திறப்பு?
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் செல்வதற்கு வசதியாக ஸ்கைவாக் (Kilambakkam Skywalk) அமைக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டே பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் சிரமம் இன்றி சென்று வர ஏதுவாக வணடலூருக்கும் - ஊரப்பாகக்த்திற்கும் நடுவே கிளாம்பாக்கம் ரயில்வே நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில் நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Kilambakkam Skywalk: மீண்டும் புது சிக்கல்
ரயில்நிலைய பயணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில், ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நடைமேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்க கூடிய நிலையில் பயணிகள் ரயில் நிலையத்திற்கும் பேருந்து நிலையத்திற்கு எளிதில் சென்று வரும் வகையில் இந்த ஆகாய நடைமேடை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டே இந்த ஸ்கைவாக் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட பிரச்சனை ஆகியவற்றால் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டது. பிப்ரவரி மாதத்திற்குள் பணிகளை முடித்து ஸ்கைவாக்கை பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், புதிய சிக்கல் எழுந்துள்ளது.
ஐஐடி நிபுணர் குழு கவலை
அதாவது ஆகாய நடைபாதையில் செய்யப்பட்டுள்ள சில மாற்றத்திற்கு ஐஐடி நிபுணர் குழு தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. ஐஐடி நிபுணர் குழு அமைப்பான நகரமயமாக்கல், கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CUBE), அனுமதிக்கப்பட்ட கட்டுமான மாதிரியை விட சில இடங்களில் வடிவம் மாறுதல், விலகுதல் இருப்பதாக தனது கவலையை பதிவு செய்துள்ளது.
இதையடுத்து கியூப் கண்காணிப்பின் படி இதை சீர் செய்யும் பணிகள் நடப்பதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ)வும் உறுதி செய்துள்ளது. இந்த நடைபாதை பாதுகாப்பானது என்றும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த புதிய நடைமேம்பாலம் மற்றும் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு
இது பயணிகளுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளது. ஏனெனில் ஏற்கனவே பொங்கலுக்கு முன்பாக ஸ்கைவாக் பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்ப்பு நிலவியதால் பயணிகள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். தற்போது சட்டமன்ற தேர்தலுக்கு பிறகே பயன்பாட்டு வருக்கும் என்ற தகவல் ஏமாற்றத்தை அளித்துள்ளது. பள்ளிகளுக்கு வரும் ஏப்ரல் - மே மாதங்களில் விடுமுறை விடப்படும்.
அப்போது, சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தற்போது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் அனைத்து பேருந்துகளும் கிளாம்பக்கத்தில் இருந்தே செல்கின்றன. தனியார் ஆம்னி பஸ்களும் கிளாம்ப்பக்கம் வந்தே புறப்படுகின்றன. இதனால், கிளாம்ப்க்கத்திற்கே வந்தே பயணிகள் பெரும்பாலும் சொந்த ஊர் செல்வார்கள்.
பயணிகளுக்கு பெரும் ஏமாற்றம்
தற்போது தங்கள் உடமைகளுடன் பேருந்துகளில் கிளாம்பாக்கம் வந்தே சொந்த ஊர் செல்லும் பஸ்சை பிடிக்க வேண்டியுள்ளது. இது கூடுதல் நேரம், செலவு பிடிப்பதால் புற நகர் ரயில் என்றால் குறைந்த கட்டணத்திலும் விரைவாகவும் கிளாம்பாக்கம் வந்துவிட்ட முடியும் என்பதால் பயணிகள் கிளாம்பாக்கம் ரயில் நிலைய திறப்பை ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த சூழலில்தான் தற்போது தாமதம் ஆககூடும் என்ற தகவல் கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
-
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications