விவசாயிகளின் வரப்பிரசாதம்.. கிசான் கிரெடிட் கார்டு திட்டம்.. கடன்பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி
சென்னை: KCC எனப்படும் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் என்றால் என்ன தெரியுமா? இதற்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா?

விவசாயிகளின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், எத்தனையோ வசதிகளை மத்திய அரசு செய்து வருகிறது.. அதில் ஒன்றுதான், கிசான் கிரெடிட் கார்ட்டு திட்டம். விவசாயிகளின் நிதிப்பற்றாக்குறையை தீர்ப்பதற்ககாகவே கடந்த ஆகஸ்ட் 1998-ல் கொண்டுவரப்பட்ட திட்டம் இதுவாகும். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் (நபார்டு) தொடங்கப்பட்ட திட்டம் இதுவாகும்.
மிக மிக குறைந்த வட்டியில், விவசாயிகளுக்கு கடன் வழங்கக்கூடிய திட்டம் இதுவாகும். விவசாயம் தொடர்பான பணிகளுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது. கடன் கொடுக்கப்பட்ட பயிரின் அறுவடை காலத்தை பொறுத்து, இந்த கடனை திருப்பி செலுத்தும் காலம் நீட்டிக்கப்படுவது இந்த திட்டத்தின் கூடுதல் சிறப்பாகும்.
யாரெல்லாம் பலன்பெறலாம்: கடன் மற்றும் நிதியுதவியைப் பெற, விவசாயிகள் அவர்களது நிலத்தின் உரிமையை உறுதி செய்யும் ஆவணங்களுடன் வங்கிக் கிளைக்கு நேரடியாகக் கொண்டு சென்றால் மட்டுமே கடன் பெற முடியும். இத்திட்டம் மூலம் கடன் பெற இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை ஆகும்.
இந்த திட்டத்தின் மூலம், விவசாயம், மீன்வளம், கால்நடை வளர்ப்பிற்கான கடன் தேவைகளை விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்கள் மற்றும் உபகரணங்களை வாங்கி கொள்ளலாம். ஒரு விவசாயி 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்...
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: விவசாயிகள் உரிமையாளர்-பயிரிடுபவர், பங்குதாரர், குத்தகை விவசாயி அல்லது சுய உதவிக் குழு அல்லது கூட்டு பொறுப்புக் குழுவின் உறுப்பினர் போன்ற தகுதிகள் இந்த திட்டத்திற்கு அவசியமாகும். 18 முதல் 75 வயது வரையிலான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிக்கு, இணை விண்ணப்பதாரர் இருப்பது அவசியம்.
கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிக்க சில ஆவணங்கள் கண்டிப்பாக தேவை.. குறிப்பாக, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்று, நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், வங்கி கேட்கும் மற்ற ஆவணங்கள் போன்றவை இருந்தால்தான், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
வங்கிகள்: இந்த திட்டத்தின் கார்டுகளை, நபார்ட், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank), பாங்க் ஆப் இந்தியா (Bank of India), எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) மற்றும் ஐ.டி.பி.ஐ (IDBI) ஆகிய வங்கிகள் வழங்குகின்றன. இந்த வங்கிகளில் ஆன்லைனிலேயே இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது,
- மேற்கண்ட வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று, "KCC க்கு விண்ணப்பிக்கவும்" என்ற ஆப்ஷனை கிளக் செய்து, KCC படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்
- பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அருகிலுள்ள கிளைக்கு சமர்ப்பித்தால், வங்கியின் கடன் அதிகாரி உங்கள் படிவத்தை மதிப்பாய்வு செய்வார்.
- பிறகு, பயன்பாட்டு குறிப்பு எண்ணை சேமித்து கொள்ள வேண்டும்
- கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், கிசான் கிரெடிட் கார்டு உங்களுக்கு அனுப்பப்பட்டுவிடும். குறைந்தது 15 நாட்களுக்குள் கிசான் கிரெடிட் கார்டு கிடைத்துவிடும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications