கிசான் விகாஸ் பத்ரா.. முதலீட்டை டபுள் மடங்காக்கும் கிசான் விகாஸ் பத்திரம்.. அசத்தல் சேமிப்பு திட்டம்
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காக எத்தனையோ அஞ்சலக திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.. அதில் ஒன்றுதான் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (KVP).. மத்திய அரசால் தொடங்கப்பட்ட மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்..
வெகுஜன மக்கள், தங்களுடைய சேமிப்புகளை அதிகரிக்கவும், தனி நபர்களிடையே ஆரோக்கியமான முதலீட்டுப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கிஷன் விகாஸ் பத்ரா திட்டம் 1988-ல் சிறிய சேமிப்பு சான்றிதழ் திட்டமாக தொடங்கப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே, இந்திய விவசாயிகளின் நலனை முன்னெடுத்தே இந்த திட்டம் ஆரம்பமானது. ஆனால், இன்று யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
நலத்திட்டம் : அதாவது இந்த திட்டத்தின் மூலம் திரட்டப்படும் தொகையானது, விவசாயிகளின் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவது, பலராலும் கவனம் பெறுகிறது.
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.. இதற்கெல்லாம் காரணம், இந்த திட்டத்தில், கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது.. அத்துடன், அதிக வட்டி விகிதமும் வாடிக்கையாளர்களை ஈர்த்துவிடுகிறது.. இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளருக்கு 7.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருவது மிக மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த வட்டி ஆண்டுக்கு ஒரு முறை முதலீட்டுடன் சேர்க்கப்படும்.
அடிப்படை விதிகள்: இந்த திட்டத்தை துவங்க வேண்டுமானால், குறைந்தபட்சமாக ரூபாய் 1000 போதும். அதிகபட்சமாக விருப்பப்பட்ட தொகையை நீங்கள் இந்த திட்டத்தில் சேமிக்க முடியும்.. இந்த திட்டத்தில் சேர்த்து 10 வருடங்களில், டபுள் லாபத்துடன், முதலீடு செய்த தொகையை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால், முதலீட்டாளர்கள், 9 வருடங்கள், 7 மாதங்கள் முதலீடு செய்த பிறகு, அடுத்த மூன்றே மாதங்களில் இரட்டிப்பு லாபத்தை பெற்றுக் கொள்ளலாம்.
எப்படி இணைவது: மேலும், கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் உடனடியாக அருகில் உள்ள தபால் அலுவலகத்திற்கு நேரில் அணுகி இணைந்து கொள்ளலாம்.சான்றிதழ் வடிவில், இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்...
ஒருவர் எவ்வளவு தொகை முதலீடு செய்தாலும், அதற்கு மத்திய அரசின் முழுப்பாதுகாப்பு உள்ளது. யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். வயது வரம்பு எதுவும் கிடையாது.
அதேபோல, ஒருவர் பெயரிலிருந்து இன்னொருவர் பெயருக்கு (நிபந்தனைக்குட்பட்டு), எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும்.. அதேபோல, பாஸ்புக் தொலைந்துவிட்டதென்றால், புது பாஸ் புத்தகம் பெற வேண்டுமானால், ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.. நாமினியை ரத்து செய்ய அல்லது மாற்ற வேண்டுமானாலும் ரூ.50 கட்டணம் உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications