ரூ 5 லட்சம் முதலீடு செய்ங்க.. ரூ 10 லட்சம் லாபம் பெறுங்க.. டபுள் டமாகா.. உடனே போஸ்ட் ஆபிஸ் போங்க
சென்னை: போஸ்ட் ஆபிஸில் ரூ 5 லட்சம் முதலீடு செய்தால் ரூ 10 லட்சமாக திருப்பி பெறுவது எப்படி என்ற இரட்டிப்பு வருமான திட்டம் குறித்து என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
10 ரூபாய் சம்பாதித்தாலும் அதில் 2 ரூபாயையாவது சேர்த்து வைக்க வேண்டும். சேமிப்புதான் எதிர்காலத்திற்கு நல்லது. இந்த சேமிப்பு நமக்கு எத்தனையோ வகைகளில் கை கொடுக்கும்.
குழந்தைகளின் கல்வி, திருமண செலவு, மருத்துவச் செலவு, நகை வாங்குவது, வீடு வாங்குவது போன்ற செலவுக்கு அடிப்படையாக அமைவது சேமிப்புதான். நாம் வாங்கும் சம்பளத்தில் முதல் ஒற்றை ரூபாய் சேமிப்பாகத்தான் இருக்க வேண்டும்.

அதிலும் பலர் இரட்டிப்பு வருமானம் என ஆசைவார்த்தை காட்டி மோசம் செய்யும் கும்பலிடம் பணத்தை கொடுத்துவிட்டு பஞ்சாயத்துக்கு போலீஸ் ஸ்டேஷன் வாசல் முன் நிற்கிறார்கள். அன்றாடம் ஒரு செய்தியாவது நிதி நிறுவன மோசடி குறித்து வருகிறது. ஆனாலும் மக்களுக்கு இரட்டிப்பு வருமானம், குறைந்த முதலீடு அதிக லாபம் , குறைந்த முதலீடு அதிக வட்டி போன்ற வார்த்தைகள் மீது அளவு கடந்த பற்று இருக்கத்தான் செய்கிறது.
மக்களின் சேமிப்பை பெருக்குவதற்குத்தான் மத்திய மாநில அரசுகள் சில திட்டங்களை கொண்டு வருகின்றன. வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், எல்ஐசி போன்றவற்றில் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து அதில் லாபத்தை பார்க்கலாம். அந்த வகையில் இரட்டிப்பு லாபத்திற்கு போஸ்ட் ஆபிஸில் உள்ள கிசான் விகாஸ் பத்திரம் என்ற திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்புத் தொகையைப் பெறலாம். இந்த நிதியாண்டில் அஞ்சலத்தின் சிறுசேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் கிசான் விகாஸ் பத்திரம் மீதான வட்டி 7.2 சதவீதம் முதல 7.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். கிசான் விகாஸ் பத்திரம் என்பது நாட்டின் அரசாங்கத்தால் நடத்தப்படும் முதலீட்டு திட்டமாகும். இது அனைத்து போஸ்ட் ஆபிஸ்களிலும் பெரிய வங்கிகளிலும் இருக்கிறது. அங்கு முதலீடு செய்து பலனடையலாம். இந்த திட்டத்தில் ரூ 5 லட்சம் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் 115 மாதங்களுக்கு முதலீடு செய்யலாம்.
அதன் பிறகு முதிர்ச்சியில் ரூ 10 லட்சம் கிடைக்கும். கிசான் விகாஸ் பத்திரம் (கேவிபி KVP) திட்டம் விவசாயிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் தங்கள் பணத்தை நீண்ட கால அடிப்படையில் சேமிக்க உதவுகிறது. குறைந்தபட்சமாக ரூ 1000 போடலாம். அதிகபட்சம் எவ்வளவு என்பதற்கான வரம்பு விதிக்கப்படவில்லை.
இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கணக்குத் தொடங்கலாம். தனியாக கணக்கு இருந்தால் 3 பெரியவர்கள் சேர்ந்து கூட்டுக் கணக்கு தொடங்கலாம். நாமினி வசதியும் உள்ளது. 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெயரில் கிசான் விகாஸ் பத்திரா கணக்கை தொடங்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications