கிளப் ஹவுசில் "அந்த" வாதம்.. 2 நாளில் போலீஸ் ஆக்சன்.. கிஷோர் கே சாமி கைது.. பின்னணியில் நடந்தது என்ன
சென்னை: தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய யூ டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் கைதுக்கு பின் கிளப் ஹவுஸ் தளத்தில் அவர் நடத்திய சமீபத்திய வாதங்களும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன.
Recommended Video
பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோரைப் பற்றி தவறான கருத்துகளை பதிவிட்டதாக யூ டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பேசியதாகவும் இவர் மீது சில வருடங்களுக்கு முன் புகார் வைக்கப்பட்டது.
அப்போதே இவரை கைது செய்ய வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நடவடிக்கை
இந்த நிலையில்தான் தற்போது கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடனே, முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று பல முறை கிஷோர் கே சாமி சமூக வலைத்தளங்களில் சவால் விட்டு இருந்தார் . தருமபுரி எம்பி டாக்டர் செந்தில் குமாரிடம், தன்னை கைது செய்யும்படி சவால் விட்டு இருந்தார்.

ஆனால் இல்லை
ஆனால் தமிழ்நாடு அரசு, இவரை தேவையில்லாத காரணங்களுக்கு எல்லாம் கைது செய்ய முடியாது என்பதால், அமைதி காத்து வந்தது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அறிஞர் அண்ணா குறித்து இவர் பதிவிட்ட தவறான போஸ்ட் ஒன்று பெரிய சர்ச்சையானது. இந்த போஸ்டை தொடர்ந்து கிஷோர் கே சாமி சார்பாக கிளப் ஹவுஸ் தளத்தில் விவாதம் ஒன்றும் நடந்தது.

விவாதம்
கிளப் ஹவுஸ் செயலியில், கிஷோர் கே சாமியை கைது செய்ய வேண்டும் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. இதை நடத்தியதே கிஷோர் கே சாமிதான் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை முடிந்தால் கைது செய்யுங்கள் என்று கிஷோர் கே சாமி அதில் சவால் விட்டு இருந்தார். அவரின் ஆதரவாளர்கள் சிலரும்கூட கிஷோர் கே சாமிக்கு ஆதரவாக பேசி இருந்தனர்.

முடியாது
என்னை எல்லாம் கைது செய்ய முடியாது என்பது போல இந்த கிஷோர் கே சாமி வாதத்தில் சவால் விட்டு இருந்தார். இந்த தலைப்பில் ஒரு நாள் மட்டுமல்ல இரண்டு நாட்கள் வாதம் நடந்தது. தலைவர்களை பற்றி ஒரு நபர் பொய்யான அவதூறு பேசிவிட்டு, துணிச்சலாக கிளப் ஹவுசில் இப்படி சவாலும் விட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

பரபரப்பு
இதுவரை பொறுமையாக இருந்த தமிழ்நாடு அரசு இந்த கிளப் ஹவுஸ் வாதத்திற்கு பின்புதான் போலீஸ் இவரை கைது செய்ய முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. கிளப் ஹவுசில் சரியாக இரண்டு நாட்களுக்கு முன் கிஷோர் கே சாமி வாதம் செய்த நிலையில், இன்று காலை கைது செய்யப்பட்டு ஜூன் 28 வரை செங்கல்பட்டு சிறையில் அடைக்கும் வகையில் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications