"இந்த" 4 விஷயத்தை பண்ணுங்க.. சிலிண்டர் அதிக காலத்திற்கு வரும்.. அடடே இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இப்போது கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான நேரத்தைக் காட்டிலும் கேஸ் டெலிவரி ஆக கூடுதல் காலம் ஆகிறது. இதுபோன்ற சூழல்களில் நாம் என்ன செய்தால் கேஸ் பயன்பாட்டைக் குறைக்க முடியும். வீட்டில் கேஸ் சிலிண்டர் அதிக நாட்கள் வர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

இந்த காலத்தில் கேஸ் சிலிண்டர் என்பது எரிவாயு ஒவ்வொரு வீட்டுக்கும் அத்தியாவசியத் தேவையாகும். ஓரிரு நாட்கள் கேஸ் சிலிண்டர் வரவில்லை என்றாலும் வீட்டின் மொத்த செட்அப்பும் மொத்தமாக காலியாகிவிடும். அதிலும் இப்போது மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் காரணமாக சப்ளையில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

gas cylinder kitchen

கேஸ் சப்ளை

இந்த சப்ளை செயின் பாதிப்பைச் சரி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர் சப்ளை குறைக்கப்பட்டுள்ளது. தனிக் குடும்பங்களின் கேஸ் சப்ளைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர் தங்கு தடையில்லாமல் கிடைப்பது உறுதி செய்யப்படும். மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட கேஸ் சப்ளை இன்னுமே முழுமையாக நார்மலாகவில்லை. வழக்கமாக டெலிவரி செய்யப்படும் நாட்களை விடக் கூடுதலாக ஓரிரு நாட்கள் ஆகவே செய்கிறது.

இதனால் ஒரு சிலிண்டர் கனெக்ஷன் மட்டுமே வைத்திருப்போர் அதைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. சரியான முறையில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தினால் கேஸ் சீக்கிரம் தீர்வதைத் தடுக்க முடியும். இது தொடர்பாக வல்லுநர்கள் சொல்லும் கருத்துகளை நாம் பார்க்கலாம்.

செய்ய வேண்டியவை

1. பெரும்பாலானோர் கேஸ் அடுப்பை வாங்கிய பிறகு அதன் பராமரிப்பைப் புறக்கணிக்கின்றனர். அடுப்பின் பர்னர்களில் தூசு மற்றும் க்ரீஸ் படிமங்கள் சேர்வதால், கேஸின் சீரான ஓட்டம் தடைப்படுகிறது. இதனால் கேஸ் பயன்பாடும் அதிகரிக்கிறது. இதனால், பர்னர்களைத் தொடர்ந்து சுத்தம் செய்து அவசியம். மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை அடுப்பை முறையாக சர்வீஸ் செய்வதும் அவசியம். அப்போது தான் கேஸ் பயன்பாடு நார்மலாக இருக்கும்.

பழைய ரெகுலேட்டர்கள் சரியாகச் செயல்படாமல் அழுத்தம் அதிகரிக்கலாம் என்பதால், அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாற்றுவது அவசியம். எரிவாயு குழாய்களைத் தவறாமல் பரிசோதிப்பது கசிவுகளைக் கண்டறிந்து, அதனால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க உதவும்.

மூடிய பாத்திரம்

2. அதேபோல சமைக்கும்போது நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்களும் கூட நாம் பயன்படுத்தும் கேஸ் அளவை கண்ட்ரோலில் வைத்திருக்க உதவும். உதாரணமாகப் பாத்திரத்தை மூடி வைத்துச் சமைப்பது முக்கியமானது. இது சமைக்கும்போது அதன் வெப்பம் வெளியேறுவதைத் தடுக்கும். இது உணவு விரைவில் வேக உதவுகிறது. இந்த எளிய செயல் கேஸ் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்கும்.

3. மேலும், அடுப்பைப் பற்ற வைத்த பிறகு காய்கறிகளை நறுக்குவது, மசாலாக்களை ரெடி செய்வது போன்ற செயலை தவிர்க்கவும். இது அதிகப்படியான கேஸை வீணடிக்கும். சமைக்க முன் அனைத்துப் பொருட்களையும் தயார் செய்வது நல்லது. அரிசி, பருப்பு போன்றவற்றை முன்கூட்டியே ஊறவைப்பதும் விரைவாகச் சமைக்க உதவும்.

பிரஷர் குக்கர்

4. பிரஷர் குக்கரைப் பயன்படுத்துவதும் கேஸ் சிக்கனத்திற்கான சிறந்த வழி. இது சாதாரண பாத்திரங்களை விட உணவை மிக வேகமாகச் சமைக்கிறது. அரிசி சமைக்கும்போதே ஒரு சிறிய கிண்ணத்தில் பருப்பு அல்லது காய்கறிகளை வைத்து ஒரே நேரத்தில் பலவற்றையும் சமைக்கலாம். காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக வெட்டுவதும் வேகமாக வேக உதவும்.

இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடும்பங்கள் தங்கள் மாத கேஸ் நுகர்வில் சுமார் 15 முதல் 20 சதவீதம் வரை குறைக்க முடியும். இது பெரிய அளவு போலத் தெரியவில்லை என்றாலும் இப்போது நிலவும் சிக்கலான கேஸ் சப்ளை காலத்தில் இது நமக்கு மிக பெரிய உதவியாக இருக்கும். இதன் மூலம் சில வாரங்கள் வரை நம்மால் கேஸை பயன்படுத்த முடியும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+