சிரித்த முகத்துடன் வந்த கொங்கு ஈஸ்வரன்.. முகத்தில் மகிழ்ச்சியை பாருங்க! தொகுதி பங்கீடு என்னாச்சு?
சென்னை: திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையில் முழு வீச்சில் ஈடுபட்டு இருக்கின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்று இருந்தபோதே திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. இந்த நிலையில் இன்று திமுக பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான டிஆர் பாலு தலைமையிலான குழு கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மேற்கொண்டது.

அந்த வகையில் இன்று மாலை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை மேற்கொண்டது. அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு தங்கள் தரப்பு எதிர்பார்ப்புகளை முன்வைத்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி. இந்த நிலையில் இம்முறையும் நாமக்கல் தொகுதியில் போட்டியிட அக்கட்சி விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் அக்கட்சியின் திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே திமுக கூட்டணியில் நாமக்கல் அல்லது பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் ஒன்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து வெளியே சிரித்த முகத்துடன் வந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை. உள்ளே என்ன பேசினோம் என்பதை வெளியில் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் வேறு மாதிரி போய்விடும். எங்கள் முகத்தில் உள்ள மகிழ்ச்சியை பாருங்கள். அதை வைத்தே நீங்கள் புரிந்துகொள்ளலாம். கூட்டணி மாறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். விரைவில் நல்ல முடிவு வரும்." என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications