மாநாட்டு மன்னன் கே.என்.நேரு! உதயநிதி ஸ்டாலின் சூட்டிய புதிய பட்டம்! திமுக இளைஞரணி மாநாடு நிதி?
சென்னை: அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவுக்கு மாநாட்டு மன்னன் என்ற புதிய அடைமொழி சூட்டியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சேலம் திமுக இளைஞரணி மாநாடுக்கு அமைச்சர் நேரு தான் பொறுப்பாளர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மாநாட்டுக்கான நிதி குறித்து உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ள தகவல் வருமாறு;

'மாநாட்டு மன்னன்' என்று போற்றப்படும் மாண்புமிகு அண்ணன் நேரு அவர்கள்தான் சேலம் இளைஞர் அணி மாநாட்டுக்கும் பொறுப்பாளர். "மாநாட்டுக்கான நிதியை நான் இப்போது அறிவிக்கப்போவதில்லை. மாநாட்டு பந்தலிலேயே அதை அறிவிப்பேன்" என்றார் நேரு அண்ணன்.
"நேரு அண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற அனைத்து மாநாடுகளுமே வெற்றிதான். அந்த வகையில், சேலம் மாநாடும் மிகப்பெரிய வெற்றிபெறும்" என்ற என் நம்பிகையை இளைஞர்களிடம் எடுத்துக்கூறி, "2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நடைபெற உள்ள இந்த மாநாட்டை வெற்றிபெற வைப்பது செயல்வீரர்களான நம் இளைஞர்கள் ஒவ்வொருவர் கையிலும் தான் உள்ளது".
திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையிலேயே அமைச்சர் நேருவை உதயநிதி இவ்வாறு புகழ்ந்து பேசியிருப்பது நேரு தரப்புக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. எப்படியும் திமுக இளைஞரணி மாநாடுக்கு அமைச்சர் நேரு கணிசமான பெரும் நிதியை அள்ளிக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மூர்த்தி, உள்ளிட்டோரும் தங்கள் பங்காக இளைஞரணி மாநாடுக்கு பெரும் தொகையை அள்ளிக் கொடுப்பார்கள் என எதிர்பார்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications