இ.டி.யாவது.. மோடியாவது.. திருச்சியில் திமுகவின் மெயின் பிக்சர்.. சொல்லி அடிக்கப் போகும் நேரு
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் அதிமுக பாஜக கூட்டணி அவர்களுக்கு பல வகைகளில் நெருக்கடி கொடுத்து வருகிறது. அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த பிரச்சனையை அதிமுக, பாஜகவினர் பூதாகரமாக்கி வருகிறார்கள். இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் திருச்சியில் திருப்புமுனை ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்ட மாநாட்டிற்கு நேரு ஸ்கெட்ஸ் போட்டு வருகிறார். திருச்சி மாநாடு தான் மெயின் பிக்சர் என்று எதிர்க்கட்சிகளுக்கு சூசகமாக அவர் பதிலும் அளித்துள்ளார் [KN Nehru].
இதுகுறித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான கே. என். நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில்," மார்ச் 9 ஆம் தேதி திருச்சியில் 10 லட்சம் நிர்வாகிகள் கலந்து கொள்ளும் மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் தயாராகிக் கொண்டிருக்கிறோம். திருச்சியின் மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட திக்கெட்டும் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். திருச்சியில் திரளும் கூட்டம் 2026 சட்டப்பேரைவைத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாய் அமைந்திட வேண்டும்.

திருச்சியில் மெயின் பிக்சர்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு', 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவாடி', 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' பரப்புரைகள், கழக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, வாக்குச்சாவடி நிலை முகவர்கள் - உறுப்பினர்கள் பயிற்சிக் கூட்டம், வெல்லும் தமிழ்ப்பெண்கள் மகளிரணி மாநாடுகள், வீடு வீடாகப் பரப்புரை என நாம் அசுர வேகத்தில் களப்பணியாற்றி வந்தாலும் தலைவர் கூறியது போல திருச்சி மாநில மாநாடு தான் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கானமெயின் பிக்சராக அமைய உள்ளது.
இந்த மாபெரும் மாநில மாநாட்டில் அனைத்து தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட - மாநகர - நகர - ஒன்றிய -பகுதி - பேரூர் - வார்டு - கிளைக் கழக செயலாளர்கள் - நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் மாநில -மாவட்ட - மாநகர - நகர - ஒன்றிய - பகுதி - பேரூர் அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் - நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள் என கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
உரிய ஏற்பாடுகள்
சார்பு அணிகளின் மாநிலச் செயலாளர்கள், அமைப்பாளர்களும் தங்கள் அணி சார்பில் அனைவரும் முழுமையாக கலந்து கொள்வதை உறுதி செய்திட வேண்டும். 10 லட்சம் பேர் கலந்து கொள்ளும் இம்மாபெரும் மாநாட்டிற்கான முன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடும் வகையில் அனைத்து கழக மாவட்ட செயலாளார்களும் அந்தந்த மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் அளவில் நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி திருச்சி மாநில மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை, வாகன வசதிகள், செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்திட வேண்டும்.
வாகன நிறுத்தும் வசதி, போக்குவரத்து வழித்தட ஏற்பாடுகளை முன் கூட்டியே திட்டமிட வசதியாக அந்தந்த மாவட்டங்களில் இருந்து கிளம்பும் வாகன விவரங்களை மார்ச் 1 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதேபோல ஒரு கழக நிர்வாகியும் விடுபடாமல் மாநாட்டில் கலந்து கொள்வதையும், கழகத்தலைவர் உரையை முடிக்கும் வரையில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கும் வழிகாட்டி, மாநாட்டு திடலுக்கு உரிய நேரத்திற்கு வந்துவிடுவதையும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் உறுதி செய்திட வேண்டும்.
தமிழ்நாடு வெல்லட்டும்
மாவட்டத்தின் கடைசி வாகனம் மாநாடு நோக்கி கிளம்பிய பிறகு தான் மாவட்ட செயலாளர்கள் மாநாட்டிற்கு கிளம்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். கரை புரண்டு ஓடும் காவிரியாய் - தடைபோட முடியாத கடல் அலையாய் திருச்சியில் திரள்வோம் - ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக்க சூளுரைப்போம். மீண்டும் திராவிட மாடல் 2.o ஆட்சி அமைப்போம். ஸ்டாலின் தொடரட்டும் , தமிழ்நாடு வெல்லட்டும்" என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications