சுதந்திர தின கொடி ஏற்றும் முறை! குடியரசுத் தினத்துடன் இத்தனை வேறுபாடுகளா? சுவாரஸ்யம்!
சென்னை: சுதந்திரத் தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றும் முறையில் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. அது என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
தேசிய கொடி ஏற்றுவதுதானே எப்போது ஒரே மாதிரியாகத்தான் ஏற்றுவார்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறு! நாளை 80ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் யார் கொடியேற்றுகிறார்கள் என்பதிலேயே சிலருக்கு வித்தியாசம் தெரியாது. அதாவது சுதந்திர தினத்தன்று பிரதமரும், குடியரசுத் தினத்தன்று குடியரசு தலைவரும் ஏற்றுவார்கள்.
கொடியேற்றும் நிகழ்வு ஒரே மாதிரி என்றாலும் இரண்டுக்கு சில வித்தியாசங்கள் உள்ளன. அது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். அதாவது இரண்டையும் கொடியேற்றுதல் என சொன்னாலும் இரண்டும் முக்கிய வேறுபாடு உண்டு.
காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதிய தேசத்தின் எழுச்சியைக் குறிக்கும் வகையில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி, கம்பத்தின் கீழிந்து ஏற்றப்பட்டது.
அதனால்தான் சுதந்திரம் பெற்றதன் நினைவாக இன்று வரை கம்பத்தின் கீழிந்து கொடி ஏற்றப்படுகிறது. அது போல் குடியரசுத் தினமான ஜனவரி 26 ஆம் தேதி அன்று மூவர்ணக் கொடியை அவிழ்க்கும் போது கொடி மூடப்பட்டு கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும்.
இந்திய குடியரசுத் தலைவர் அதை சுதந்திர தினத்தன்று செய்வது போல் மேல் ஏற்றாமல் அப்படியே அவிழ்த்துவிடுவார். முதல் சுதந்திரத் தினத்தின்போது குடியரசுத் தலைவர் இல்லை. இதனால் மவுண்ட்பேட்டன் பிரவு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தார்.
அது ஆங்கிலேய அலுவலகம் அகற்றப்படுவதற்கு முன்பு, குடியரசுத் தலைவர் பதவிக்கு சமமான பதவிக்கு இருந்தது. புதிதாக சுதந்திரம் பெற்ற தேசத்தின் கொடியை ஏற்றுவதற்கு காலனித்துவவாதி பொறுப்பேற்க முடியாது. எனவே அந்த பணி இந்திய மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவருக்கு மட்டுமே வழங்க முடியும்.
சுதந்திரம் அடைவதற்கு முன்பு தேர்தல் நடத்தப்பட்டு இடைக்கால இந்திய அரசை அமைத்திருப்போம். அந்த அரசின் தலைமை பொறுப்பான பிரதமர் பதவியில் ஜவஹர்லால் நேரு இருந்தார். அதனால் அவரே அந்த முறை கொடியை ஏற்றினார். அது முதல் சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றுகிறார்.
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு இந்திய நாடு குடியரசு நாடு என அறிவிக்கும் தினமான குடியரசு நாளில் நாட்டின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கெனவே சுதந்திரம் பெற்ற நாடு இப்போது குடியரசு நாடாக மட்டும் மாறுவதால் புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற ராஜேந்திர பிரசாத் கொடியை அவிழ்த்து வைத்தார்.
அந்த பழக்கமே இன்றும் தொடர்கிறது. பிரதமர் செங்கோட்டையில் ஏற்றும் மூவர்ணக் கொடியை குடியரசுத் தினத்தன்று குடியரசுத் தலைவர் ராஜ்பாத்தில் அவிழ்க்கிறார். இதுதான் இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம்!


Click it and Unblock the Notifications
