Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அறிவுசார் நகரம், ஆராய்ச்சி பூங்காக்கள்.. அசத்தல் திட்டங்கள்.. உயர்கல்வித்துறைக்கு ரூ.5268 கோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய தொழில்நுட்ப கழகம், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசு பள்ளி மாணவர்கள் ஊக்குவிக்கப்பட உள்ளனர். இங்கு இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச்செலவையும் மாநில அரசே ஏற்கும். 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இந்த உதவியை பெறலாம் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார். துறைவாரியா பல்வேறு நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீட்டு விபரங்களை அவர் கூறினார்.

தமிழக உயர்கல்வித்துறைக்கான நிதி, திட்டங்கள் குறித்து பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:

 அறிவுசார் நகரம்

அறிவுசார் நகரம்

தமிழகத்தில் திறன்மிக்க மனித வளத்தை மேலும் மேம்படுத்தி அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது அரசின் தொலைநோக்கு திட்டமாகும். உலகளாவிய பங்களிப்புடன் ஒரு அறிவுசார் நகரம்(Knowledge city) உருவாக்கப்படும். இது உலகில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகளை கொண்டிருக்கும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள, திறன் பயிற்சி மையங்கள், அறிவுசார் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பிரிவுகளை இந்த அறிவுசார் நகரம் கொண்டிருக்கும்.

ஆராய்ச்சி பூங்காக்கள்

ஆராய்ச்சி பூங்காக்கள்

மேலும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ( டிட்கோ), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (டேன்ஜிட்கோ போன்ற அரசு பொது நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களுடன் இணைந்து மாநில பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களில் ஆராய்ச்சி பூங்காக்கள் அமைக்க ஊக்குவிக்கப்படும்.

மாணவர் சேர்க்கை உயர்வு

மாணவர் சேர்க்கை உயர்வு

தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் உயர்ந்து வருகிறது. அதற்கேற்ப அரசு கல்லூரி, பல்தொழில்நுட்ப கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம். இதற்காக அடுத்த 5 ஆண்டில் ரூ.1000 கோடியில் சிறப்பு திட்டம் உருவாக்கி புதிய வகுப்பறை, விடுதி, ஆய்வகம், திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும். இதற்காக இந்த ஆண்டில் ரூ.250 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் எவ்வளவு

மொத்தம் எவ்வளவு

முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணத்துக்காக ரூ.201 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில் உயர்கல்வித்துறைக்கு மொத்தம் ரூ.5,668.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நான் முதல்வன்

நான் முதல்வன்

ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதே ‛நான் முதல்வன்' கனவு திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் மாணவ-மாணவியர்களின் தனி திறமைகள் அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படும். மேலும் தொழில் நிறுவனங்களின் திறன் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சிகள் வழங்கப்படும். இதன்மூலம் மாணவர்களின் வேலை பெறும் திறன் பெருகும். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய திட்டம் அறிமுகம்

புதிய திட்டம் அறிமுகம்

உலகில் பல நாடுகளின் விஞ்ஞானியாக, பேராசியர்களாக, தொழில் நிபுணர்களாக தமிழர்கள் தங்களது துறையில் சாதனை புரிகிறார்கள். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஆராய்ச்சி திறனை உயர்த்துதல், மாணவர்களுக்கு வழிக்காட்டுத்தல், வளர்ச்சி வரும் துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல் போன்றவை இவர்களின் இணைந்து செயல்படுத்த புது திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

Recommended Video

    TN Budget 2022-23: தமிழ் மொழிக்காக PTR-ன் அறிவிப்பு! Europe வரை ஆராய்ச்சி | OneIndia Tamil
    கல்வி செலவு ஏற்கும்

    கல்வி செலவு ஏற்கும்

    இந்திய தொழில்நுட்ப கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசு பள்ளி மாணவர்கள் ஊக்குவிக்கப்பட உள்ளனர். அதன்படி இந்நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச்செலவையும் மாநில அரசே ஏற்கும். 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியை பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+