மாதவிடாய் கப், பிரிட்ஜ் முட்டை தட்டு! சரிதா உடம்பில் மறைத்த பொருள் என்ன? யாரிந்த கொச்சி ஓட்டல் ஜோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரள மாநிலம் கொச்சி ஹோட்டலில், ஒரு லிவ்-இன்-ஜோடி சிக்கியுள்ளது.. எர்ணாகுளம் எக்சைஸ் துறையினர் நடத்திய அதிரடிகளில் இந்த ஜோடி இப்போது போலீஸ் கஸ்டடியில் உள்ளது.. அவர்களிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. இதில் சரிதா சொன்ன மாஸ்டர் பிளான்களை கேட்டு, போலீசுக்கு தலையே சுற்றிவிட்டது.. என்ன நடந்தது? யாரிந்த சரிதா?

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு செயற்கை போதைப்பொருளான எம்.டி.எம்.ஏ (MDMA) கடத்தி வரப்பட்டு, இரவு நேர பார்ட்டிகளில் விநியோகிக்கப்பட்டு வந்த விவகாரத்தில், லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்த தம்பதியை எர்ணாகுளம் மண்டல எக்சைஸ் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

Kochi Hotel Couple Arrested Kochi Saritha Excise Raid

ஆலப்புழை மாவட்டம் திருக்குன்னப்புழா கொட்டேமுரியை சேர்ந்தவர் முகமது ஷாஃபி.. 29 வயதாகிறது.. இவருடைய பெண் தோழி சரிதா.. இவர்கள் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வருபவர்கள்..

இவர்களது வேலையே போதைப்பொருள் கடத்துவதுதான்.. எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழை மாவட்டங்களில் உள்ள பப், நைட் கிளப்புகள், தனிநபர் பார்ட்டிகளுக்கெல்லாம் தொடர்ந்து போதைப்பொருள் சப்ளை செய்து வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். இதில் முகமது ஷாஃபி மீது ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கொச்சி ஓட்டல் ஜோடி

2 நாட்களுக்கு முன்பு, பெங்களூருவில் இருந்து போதைப்பொருளை வாங்கிக்கொண்டு இவர்கள் கேரளாவுக்கு பஸ்ஸில் வந்திருக்கிறார்கள்.. இவர்கள் 2 பேரும் போதைப்பொருளுடன் வருகிறார்கள் என்ற தகவல் போலீசுக்கு தெரியவந்தது.. இதனால் கண்ணூர் இரிட்டி பகுதியில், எக்சைஸ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.. ஆனால் செக்போஸ்ட்டை பார்த்ததுமே சரிதா உஷாராகி விட்டார்.. பஸ் நிற்கும் முன்பே, கீழே இறங்கி வேறு வண்டியில் தப்பித்து எர்ணாகுளம் சென்றுவிட்டார்..

பஸ்ஸில் முகமது ஷாஃபி மட்டும் இருந்ததால், அவரை அதிகாரிகள் சோதனை செய்தபோது, எந்த போதைப்பொருளும் கிடைக்கவில்லை.. அதனால் அவரை விடுவித்தனர். பிறகு எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டல் ரூமில் இருவரும் மீண்டும் சந்தித்து கொண்டார்கள்.

இப்படியே பல வாரங்களாக இவர்களை ரகசியமாகக் கண்காணித்து வந்த எர்ணாகுளம் எக்சைஸ் இன்ஸ்பெக்டர் அபிராஜ் ஆர் தலைமையிலான "ஆபரேஷன் தண்டர்'" சிறப்புப் படையை உருவாக்கினார்.. நேற்று முன்தினம் அதாவது ஜூலை 29ம் தேதி, அந்த ஹோட்டல் ரூமில் இந்த டீம் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டது

மாதவிடாய் கப்

அந்த ரூமில் அப்போது முகமது ஷாஃபி மட்டும் இருந்தார்.. அவரை கைது செய்த அதிகாரிகள், அவரிடமிருந்து 65.27 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர்.. அந்த நேரத்தில் போதைப்பொருளுடன் ஆலப்புழைக்கு சரிதா சென்றிருந்ததால், அதே நாளில் இரவு 10.30 மணிக்கு சரிதாவை கைது செய்தனர். ஆலப்புழையில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஃபிரிட்ஜின் முட்டை வைக்கும் தட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 28.76 கிராம் எம்.டி.எம்.ஏ பறிமுதல் செய்யப்பட்டது.

ஒட்டுமொத்தமாக 94.032 கிராம் எம்.டி.எம்.ஏ, போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த 17,770 ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு செல்போன் போன்றவற்றை இந்த ஜோடியிடமிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்... கைது செய்யப்பட்ட இருவரிடமும் எக்சைஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையும் நடத்தினார்கள்.. அப்போது போதைப்பொருள் கடத்துவதற்காக சரிதா கையாண்ட ஐடியாக்களை கேட்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்..

சரிதாவின் மாஸ்டர் பிளான்

அதாவது, போலீசாரின் சோதனைகளில் பிடிபடாமல் இருக்க, சுமார் 100 கிராம் படிக வடிவ எம்.டி.எம்.ஏ போதைப்பொருளை ஒரு ஜிப்-லாக் பாக்கெட்டில் அடைத்து, கருப்பு டேப் மூலம் சுற்றி, பெண்களுக்கு பயன்படும் மாதவிடாய் கப் எனப்படும் "மென்ஸ்ட்ருவல் கப்" (Menstrual Cup) பகுதிக்குள் வைத்து, அதை சூப்பர் க்ளூ கொண்டு ஒட்டி தனது உடலின் ரகசிய பகுதியில் மறைத்து வைத்து கடத்துவது சரிதாவின் வழக்கமாம்..

5 முதல் 10 கிராம் வரையிலான சிறிய அளவிலான போதைப்பொருட்களைத் தனது உள்ளாடைகளின் பேடிங் பகுதிக்குள் வைத்து தைத்து, எடுத்து செல்வாராம்..

அதிர்ச்சியில் போலீசார்

மேலும், பெங்களூருவில் 1.15 லட்சம் ரூபாய்க்கு வாங்கும் 100 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருளுடன், 20 கிராம் அஜினா மோட்டோ பொடியைக் கலந்து கலப்படம் செய்து, ஒரு கிராம் 3,000 முதல் 4,000 ரூபாய் வரை விற்பனை செய்து லட்சங்களில் லாபம் ஈட்டி வந்துள்ளாராம்..

அதுமட்டுமல்ல, இந்த ஜோடி போதைப்பொருள் வியாபாரத்தில் பெரும் லாபம் ஈட்டுவதற்காக அஜினோமோட்டோ கலப்படத்தையும் செய்துள்ளது. பெங்களூருவில் 100 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருளை சுமார் 1.15 லட்சம் ரூபாய்க்கு வாங்கும் இவர்கள், அதனுடன் 20 கிராம் அஜினோமோட்டோவை கலந்து விடுவார்களாம்.. அஜினோமோட்டோவும் மணமற்ற, லேசான கசப்புத் தன்மையுடைய வெள்ளை நிறப் பொடி என்பதால், வாங்குபவர்களால் போதைப்பொருளுக்கும் இதற்கும் இடையிலான வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாதாம்.

தொடர் விசாரணை

இப்படி இவ்வாறு தயாரிக்கப்படும் கலப்பட போதைப்பொருளை 10 முதல் 15 கிராம் கொண்ட சின்ன சின்ன பாக்கெட்டுகளாக பிரித்து, ஒரு கிராம் 3,000 முதல் 4,000 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு வாரப் பயணத்திலும் 2.75 லட்சம் முதல் 3.5 லட்சம் ரூபாய் வரை இவர்கள் லாபம் ஈட்டியது தெரியவந்துள்ளது.

இப்போது இந்த ஜோடியிடம் எர்ணாகுளம் எக்சைஸ் துணை ஆணையர் சதீஷ் பி.கே தலைமையில் மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+