நான் சாட்சி சொல்றேன்! சசிகலா சொன்ன ஒரு வார்த்தை.. ரெடியானது தனிப்படை! விசாரணையில் "சம்பவம்"
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை விசாரணையில் இன்று போலீசாரிடம் சசிகலா முக்கியமான சில விஷயங்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Recommended Video
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக சசிகலாவிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர் . எஸ்டேட் உரிமையாளர் என்ற முறையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
சசிகலாவிடம் சென்னையில் உள்ள அவரது தி நகர் வீட்டில் வைத்து இன்று விசாரணை செய்யப்பட்டது. மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். எஸ்டேட்டில் காணாமல் போன ஆவணங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

121 கேள்விகள் ஓவர்
இன்று விசாரணையில் சசிகலாவிடம் மொத்தம் 121 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் கோடநாடு எஸ்டேட்டில் என்ன இருந்தது என்பது பற்றிய கேள்விகள் இவை. கோப்புகள் இருந்ததா.. இருந்தது என்றால் என்ன மாதிரியான கோப்புகள். காணாமல் போன கோப்புகள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கிறது. அங்கு எஸ்டேட்டில் இருந்து சில கோப்புகள் திருட்டின் போது காணாமல் போய் இருக்கின்றன.

சரளமாக பதில் சொன்னார்
அந்த கோப்புகள் சென்னையில் இருப்பதாக போலீஸ் சந்தேகிக்கிறது. இந்த கோப்புகள் குறித்து சசிகலாவிடம் கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது, இந்த கேள்விகள் அனைத்திற்கும் சசிகலா சரளமாக பதில் அளித்து இருக்கிறார். முக்கியமாக கோடநாடு எஸ்டேட்டில் நடந்தது கொடுமையான விஷயம். அடுத்தடுத்து பலர் இறந்துட்டாங்க. இதை போலீஸ் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று சசிகலா உணர்ச்சிவசப்பட்டு பேசியதாக கூறப்படுகிறது.

குற்றவாளிகளை பிடிக்கணும்
குற்றவாளிகளை பிடிக்கணும், எனக்கு அதுதான் முக்கியம் என்று சசிகலா கூறி இருக்கிறாராம். அதோடு நான் எங்கு வேண்டுமானாலும் சாட்சி சொல்ல தயார். எஸ்டேட் பற்றி எனக்கு தெரிந்த விஷயங்களை சொல்ல தயார். நான் சிறைக்கு வெளியே இருந்த போது எஸ்டேட்டில் என்ன இருந்தது என்பது பற்றி சாட்சி சொல்ல தயார் என்று சசிகலா மிகவும் ஒத்துழைப்புடன் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் தனிப்படை போலீசார் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

தனிப்படை ரெடி
சசிகலா சாட்சி அளிக்க இதில் வேறு விஷயம் எதுவும் இல்லை. எஸ்டேட் உரிமையாளர் என்ற முறையில் என்னென்னெ பொருட்கள் காணாமல் போனது என்று மட்டுமே அவர் சாட்சி அளிக்க முடியும். இருந்தாலும் அவர் வழக்கில் முழுமையாக ஒத்துழைப்பதாக கூறி இருப்பதால் தனிப்படை போலீசார் வேகம் எடுத்துள்ளனர். அதிலும் சாட்சி அளிக்க தயார் என்று சசிகலா கூறியது வழக்கில் வேகமாக விசாரணைக்கு வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் சசிகலா வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடத்த காவல்துறை திட்டம் போட்டுள்ளது.

ரெக்கார்ட்
மற்றபடி சசிகலா இந்த விசாரணையில் பேசிய மற்ற விவரங்கள் வெளியாகவில்லை, கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் 500 கேள்விகள் கேட்கப்பட உள்ளது. இப்போது கேட்கப்பட்ட கேள்விகள் போக மீதமுள்ள கேள்விகள் மீண்டும் விசாரணையில் கேட்கப்பட உள்ளது. இப்போது இரண்டரை மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. சசிகலாவிடம் கேட்கப்படும் கேள்விகளும், அவர் அளிக்கும் பதில்களும் முழுமையாக பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications