எம்ஜிஆரின் கார் நம்பரை பயன்படுத்திய கோடநாடு கொள்ளை கும்பல்.. என்ன காரணம்? பரபரப்பு தகவல்
சென்னை: கோடநாட்டில் கொலை மற்றும் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பல் எம்ஜிஆர் பயன்படுத்திய கார் நம்பரை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தோண்ட தோண்ட பூதங்களாக வெளி வந்து கொண்டு இருக்கிறது. சினிமாவில் காட்டப்படுவதை விட மோசமாக பல திருப்பங்களுடன் இந்த வழக்கு சென்று கொண்டு இருக்கிறது. முன்னாள் முதல்வர் வீட்டில் கொலை மற்றும் கொள்ளை.. அந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களின் அடுத்தடுத்த மர்ம மரணம் என்று கோடநாடு வழக்கு திகிலுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
இன்றுதான் சந்தோஷ் சாமி என்ற கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சாட்சியத்தின் பேட்டி ஊடகங்களில் வெளியானது. செபி என்ற நபர்தான் கோடநாடு வழக்கின் முதல் குற்றவாளியான கனகராஜை கொலை செய்ய சொன்னதாக சந்தோஷ் சாமி பேட்டி அளித்துள்ளார்.

பரபரப்பு
இந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் தற்போது புதிய திருப்பமாக கோடநாட்டில் கொலை மற்றும் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பல் எம்ஜிஆர் பயன்படுத்திய கார் நம்பரை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கும்பல் தங்கள் கார் நம்பர் பிளேட்களை மாற்றி பயன்படுத்துவது வழக்கம். அதேபோல்தான் இவர்களும் கார் நம்பர் பிளேட்டை மாற்றி பயன்படுத்தி உள்னனர்.

கொலை
2017 ஏப்ரல் 24ம் தேதி கோடநாட்டில் கொள்ளை அடித்துவிட்டு கும்பலில் ஒரு பிரிவினர் கூடலூர் வழியாக கேரளா தப்பி செல்ல முயன்று உள்ளனர். அப்போது கேரளா எல்லையில் தமிழ்நாடு போலீசார் இந்த கும்பலை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். இரண்டு காரில் வந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதன்பின் சிலரின் தலையீடு காரணமாக இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இதில் ஒரு காரில் பதிவெண் TN 43 R 4777 என்று இருந்துள்ளது.

பதிவெண் TN 43 R 4777
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பயன்படுத்திய காரின் பதிவெண் ஆகும். இந்த கோடநாடு கொள்ளை கும்பல் எம்ஜிஆர் கார் நம்பரை பொய்யாக பயன்படுத்தி கொள்ளையில் ஈடுப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனகராஜ் ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் ஆவார்.

மாற்றினார்
இவர்தான் கோடநாடு கொள்ளை கும்பலின் காரில் பதிவெண்ணை மாற்றி கொடுத்துள்ளார். அதில் ஒரு காரில் TN 43 R 4777 என்று கனகராஜ்தான் மாற்றிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. கோடநாடு வழக்கில் திடீரென இந்த எம்ஜிஆர் பதிவெண் பல கேள்விகளை, குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் ஏன் சரியாக எம்ஜிஆர் பதிவெண்ணை பயன்படுத்தி கொள்ளையடித்தனர்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காரணம் என்ன?
கனகராஜ் எம்ஜிஆரின் கார் பதிவு எண்ணை தேர்வு செய்தது ஏன்? போலீசார் கூடலூரில் இவர்களை கைது செய்யாதது ஏன்? என்று பல கேள்விகள் எழுந்து இருக்கின்றன. இந்த வழக்கில் விசாரணை செல்ல செல்ல பல புதிய தகவல்கள் வெளி வந்து கொண்டு இருக்கின்றன... இதனால் விரைவில் இந்த வழக்கில் பெரிய திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications