கோடநாடு கேஸ்.. எடப்பாடியை கை காட்டிய சயான்.. விசாரணையை புரட்டி போட்ட ஒரு ஸ்பீடு பிரேக்கர்.. ட்விஸ்ட்
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் புதிய கோணத்தில் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வரும் நாட்களில் பல அதிரடி திருப்பங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோடநாடு கேஸ்: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தோண்ட தோண்ட பூதங்களாக வெளி வந்து கொண்டு இருக்கிறது. சினிமாவில் காட்டப்படுவதை விட மோசமாக பல திருப்பங்களுடன் இந்த வழக்கு சென்று கொண்டு இருக்கிறது. 2017 ஏப்ரல் 24ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொடூரமான சம்பவத்தில் பாதுகாவலர் ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இதில் முதல் குற்றவாளியான கனகராஜ் ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர். இவர் கொள்ளை சம்பவத்திற்கு பின் சாலை விபத்து ஒன்றில் பலியாகிவிட்டார். இவரின் மரணத்தை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேர் வெவ்வேறு தருணங்களில் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.

சயான் வாக்குமூலம்: இந்த வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. வாக்குமூலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சயான் வாக்குமூலம் அளித்ததாக வெளியாகும் செய்திகள் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது.
தடயம்: இந்த எஸ்டேட்டில் இருக்கும் சில முக்கியமான கோப்புகள் அப்போது காணாமல் போனதாக தகவல்கள் வந்தன. இந்த கோப்புகளை திருடத்தான் அங்கு கொலை நடந்தேறியதாகவும் கூறப்பட்டன. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீதும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அந்த ஜெயலலிதா அறையின் உடைக்கப்பட்ட பூட்டு சமீபத்தில் கைப்பற்றப்பட்டது. சிபிசிஐடி செய்த விசாரணையில் இந்த பூட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் கொலை, கொள்ளை இடத்தில பல ஆவணங்கள் திருடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூட்டு காரணமாக வழக்கில் பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கோணம்: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் புதிய கோணத்தில் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வரும் நாட்களில் பல அதிரடி திருப்பங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி கனகராஜ் கடந்த 2017ல் சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் சந்தனகிரி பகுதியில் பலியானார். அங்கே ஸ்பீடு பிரேக்கர் ஒன்றின் அருகே பலியானார். அதே சமயம் அருகே ஸ்பீடு பிரேக்கர் ஒன்றில் வேறு ஒரு நபரும் விபத்துக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இவரை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி அந்த சாலை பகுதியில் எத்தனை ஸ்பீடு பிரேக்கர் இருந்தது, அங்கே எத்தனை கேமராக்கள் இருந்தன என்பது தொடர்பாக விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் கனகராஜுக்கு நடந்தது விபத்தா இல்லை கொலையா என்பது தெளிவாக தெரிய வரும். இதில் வழக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடாத ஸ்டாலின்: இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூட சமீபத்தில் பேசினார். அதில், இது தனிப்பட்ட ஸ்டாலின் அரசு அல்ல, திமுக என்ற தனிப்பட்ட கட்சியின் அரசு அல்ல. ஒரு இனத்தின் அரசாக, 8 கோடி மக்களின் அரசாக உள்ளது. திராவிட மாடல் அரசாக திகழ்கிறது;
கோடநாடு வழக்கில் எதிர்க்கட்சியாக மாறியதும் சிபிஐ விசாரணைக்கு எதிர்கட்சித் தலைவர் கோரிக்கை வைத்தார். அவர்கள் ஆட்சியில் தானே இந்த குற்றச்சம்பவம் நடந்தது. அப்போது ஏன் முறையாக விசாரணை செய்யவில்லை.
இதில் மேல் விசாரணையை எதிர்க்க மாட்டேன் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதன்பின் மேல் விசாரணைக்கு எதிராக பேட்டி அளித்தார். கோடநாடு பங்களா என்பதும் அந்த கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அம்மையார் பயன்படுத்திய முகாம் அலுவலகம். உங்கள் ஆட்சியிலேயே இதை நீங்கள் சரியாக விசாரிக்கவில்லை. அந்த சம்பவம் நடந்ததும் முறையாக ஆதாரங்களை சேகரிக்கவில்லை. ஆண்டுகள் பல சென்றுவிட்டதால் சில விஷயங்களை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் சிபிசிஐடி இதில் அதிரடி வேகம் காட்டி வருகிறது.
இதில் எடப்பாடி தடுமாறி வருகிறார். சயனுக்கு திமுக வழக்கறிஞர்கள் உதவி வருவதாக சொல்கிறார் எடப்பாடி. சயன் ஏற்கனவே எடப்பாடிக்கு எதிராக டெஹல்ஹாவில் பேட்டி கொடுத்தனர். இதற்காக சயனுக்கு எதிராக எடப்பாடி வழக்கு போட்டார்.அந்த வழக்கில் இருந்து அவரை காப்பற்றினோம். கோடநாடு வழக்கில் உண்மை வெளியே வரும். திமுக இதில் சும்மா இருக்காது. இதில் உண்மை குற்றவாளிகள் யார் என்பது.. உறுதியாக சொல்கிறேன்.. நிச்சயம் சொல்கிறேன்.. சிபிசிஐடி விசாரணையில் வெளியே வரும், என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications