வேகமெடுக்கும் கோடநாடு கொலை விவகாரம்.. சிபிசிஐடி அதிரடி ஆக்ஷன்! 49 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், இதில் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு பங்களாவில் ஓய்வெடுப்பது வழக்கம்.
ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அதன் பிறகு கோடநாடு பங்களாவுக்குப் பெரியளவில் யாரும் செல்லாமலேயே இருந்தனர்.

இதற்கிடையே கடந்த 2017ஆம் ஆண்டு கோடநாடு பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார். மேலும், அங்கிருந்த பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக கனகராஜ், சயான், ஜெம்சீர் அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும், இந்த வழக்கில் தொடர்புடைய பலரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில் கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார். சயன், வாளையாறு மனோஜ் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை முதலில் போலீசார் விசாரித்து வந்தனர். அவர்கள், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, மருது அழகுராஜ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடியிடம் மாற்ற டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதற்கிடையே 316 பேரிடம் பெற்ற வாக்குமூலங்கள் அடங்கிய 3600 பக்க விசாரணை அறிக்கையும் உதகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இப்போது 49 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி எஸ்பி சி.எஸ்.மாதவன் தலைமையில் இந்தத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் சிறப்பாகச் செயல்படும் போலீசாரும் இந்த தனிப்படையில் இடம்பெற்றுள்ளனர். 2 டிஎஸ்பிகள் , 3 ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள் இந்த தனிப்படையில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை அடுத்து டிசம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், அப்போது சிபிசிஐடி போலீசார் இந்த விசாரணைக் குழு குறித்த தகவல்களை விசாரணை நடைபெற்று வரும் உதகை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளனர்.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications