லாங் டிரைவ்.. ஒரே ரூமில் நீயும் நானும்.. இதுதான் கண்டிஷன்.. பிஏ வேலைக்கு வந்த பெண்ணை அலறவிட்ட எம்டி!
சென்னை: சென்னை மாதவரத்தில் தனிச்செயலாளர் பணிக்கு சென்ற பெண்ணிடம் பாலியல் ரீதியிலான கேள்விகளை கேட்டதாக தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பாபு. இவர் சென்னை மாதவரம் 200 அடி சாலை குமரன் மருத்துவமனை அருகில் கணேஷ் என்டர்பிரைசஸ் என்கின்ற பெயரில் தனியார் பெயிண்ட் வர்ணம் பூசும் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவரது நிறுவனத்திற்கு தனிச் செயலாளர் அதாவது பர்சனல் அசிஸ்டன்ட் பணிக்கு ஆள்கள் தேவை என பேப்பரில் விளம்பரம் செய்திருந்தார். இதை நம்பி அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் கணேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அலுவலக முகவரி
இதற்கு கணேஷ் பாபுவும் தனது அலுவலக முகவரியை கொடுத்து அந்த பெண்ணை இன்டர்வியூவுக்கு வர சொல்லியுள்ளார். வேலைக்கு பெண்கள் தேவை என விளம்பரம் செய்து இருந்தார். அதன்பேரில் அந்த நிறுவன பணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நேர்காணலுக்குச் சென்றிருந்தார்.

நல்ல ஆடை
அந்த பெண்ணை உள்ளே வரசொல்லி உட்கார சொல்லியுள்ளார் கணேஷ் பாபு. அப்போது அந்த பெண்ணின் பின்புறம் வந்து நீங்கள் அணிந்திருக்கும் ஆடை நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் நிறைய புதிய புதிய ஆடைகளை வாங்கி அணிய வேண்டும்.

தனி செயலாளர்
அது மட்டுமல்லாமல் தனி செயலாளர் என்ற முறையில் என்னுடன் வெளியூர்களுக்கு நாட்கணக்கில் வர வேண்டியிருக்கும். மேலும் என்னுடன் ஒரே ஹோட்டல் அறையில் தங்கியிருக்க வேண்டும் என கணேஷ்பாபு கூறியதாக தெரிகிறது. மேலும் அந்த பெண்ணிடம் ரூ 1000த்தை கொடுத்து இப்போது புதிய டிரஸ்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கணேஷ் பாபு கூறியதாகவும் தெரிகிறது.

அதிர்ச்சி அடைந்த பெண்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அந்த பணத்தை வாங்கி கணேஷ் பாபுவின் முகத்தில் வீசி எறிந்துவிட்டு "என்னை பார்த்தால் உனக்கு பணத்துக்காக எதையும் செய்பவளா தெரிகிறதா? உனக்கெல்லாம் அக்கா தங்கச்சியே இல்லையா" என கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு அந்த பெண் கோபமாக நகர்ந்தார்.

இன்னொரு பெண்ணுக்காக காத்திருப்பு
இதையடுத்து கணேஷ் பாபுவோ பரவாயில்லை, இந்த பெண் போனால் இன்னொரு பெண் வருவார், அவர் நமக்கு ஒத்துழைப்பு தருவார் என கேசுவலாக இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவரது அலுவலகத்திற்கு மாதவரம் போலீஸார் சென்றனர். போலீஸை பார்த்த கணேஷ் பாபு, ஸ்டேஷனுக்கு வெள்ளை அடிக்க அணுக வந்திருக்கிறார்கள் என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை.

கணேஷ் பாபு கைது
உடனே போலீஸார் தாங்கள் எதற்காக வந்தோம் என்பதை தெரிவித்தனர். அப்போதுதான் இன்டர்வியூவுக்கு வந்த பெண் நேராக வீட்டிற்கு சென்று அழுகாமல், போலீஸ் நிலையத்தில் தைரியமாக புகார் அளித்துள்ளார் என்பது கணேஷ்பாபுவுக்கு தெரியவந்தது. இதையடுத்து கணேஷ் பாபுவை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு முட்டுக்கட்டை
ஆண்களுக்கு இணையாக பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறார்கள். பல துறைகளை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்கிறார்கள். அப்படியிருக்கும் போது ஒரு சில ஆண்கள் இந்த கணேஷ்பாபுவை போல் பெண்களை தங்கள் இச்சைக்கு பயன்படுத்த நினைப்பதால் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications