என்னிடம் உன் மனைவி பேசாவிட்டால் .. வீடியோ அனுப்பவா.. கணவனுக்கு போன் போட்ட கால் டாக்ஸி டிரைவர்
சென்னை: வாடகை கார் புக் செய்த பெண்ணை 3 நாளில் தன் வலையில் வீழ்த்திய கால் டாக்ஸி டிரைவர், அவரை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி கணவருக்கு போன் செய்து மிரட்டி உள்ளார். இது தொடர்பாக அந்த பெண் சென்னை அண்ணாநகர் போலீசில் அளித்த புகாரை அடுத்து கொல்கத்தாவைச் சேர்ந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கொல்கத்தாவை சேர்ந்த 37வயது பெண் மனிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது கணவர் வெளிநாட்டில் இன்ஜினியராக உள்ளார். இவர்களுக்கு 12 வயதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மகன் உள்ளான். கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவரது மனைவி மனிஷா சென்னை அரும்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார். அத்துடன் மகனுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த உறவினர் திருமணத்திற்கு அண்மையில் மனிஷா சென்றுள்ளார். அங்கு ஒரு காரை புக் செய்தார். அந்த காரின் டிரைவர் சகாபுதீன் கசி, 3 நாள் கொல்கத்தாவில் இவருக்கு கார் ஓட்டியுள்ளார். பின்னர் சென்னை திரும்பினார். கொல்கத்தாவில் புக் செய்த கார் டிரைவர், அந்த பெண்ணின் செல்போன் எண்ணை பெற்று, அடிக்கடி பேசி உள்ளார்

ஆறுதல் கூறி ஜாலி
மகனை பற்றி ஆறுதலாக மனிஷாவிடம் பேச தொடங்கிய கார் டிரைவர் சகாபுதீன் 'உன் மகனை பார்க்கணும் போல் உள்ளது. சென்னை வருகிறேன்' என்று கூறி சென்னைக்கு வந்திருக்கிறார். சென்னையில் மனிஷாவிடம் நெருக்கமாக பழகி, பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

பெண் மீது தாக்கு
அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை வைத்து அந்த பெண்ணை அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன மனிஷா, கார் டிரைவரின் போன் நம்பரை பிளாக் செய்துவிட்டு பேசுவதை தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த கார் டிரைவர், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி செல்போனை பிடுங்கிக் கொண்டு கொல்கத்தாவுக்கு சென்றுவிட்டார்.

அனுப்புவேன்
அதன் பின்னர் பெண்ணுடைய கணவருக்கு போன் செய்து, 'உன் மனைவியுடன் நான் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உ ள்ளது. உன் மனைவி என்னிடம் பேசாவிட்டால் உங்கள் உறவினர்களுக்கு உல்லாச வீடியோவை அனுப்பி விடுவேன்' என்று மிரட்டி உள்ளார்.

போலீசில் புகார்
அதன் பின்னர் அந்த பெண் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, கொல்கத்தா கார் டிரைவர் மீது கொலை மிரட்டல், பெண்ணை தகாத வார்த்தையால் பேசியது, தாக்கியது, பாலியல் தொல்லை கொடுத்தது போன்ற பிரிவுகளில் வழக்குகள் செய்தனர்.

சிறையில் அடைப்பு
பின்னர் காவல் ஆய்வாளர் சாந்திதேவி தலைமையில் தனிப்படை போலீசார் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவரின் போன் நம்பரை டவர் மூலமாக கண்டு பிடித்தனர். கொல்கத்தாவில் பதுங்கியிருந்த சகாபுதீன் கசியை கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். போலீசார் அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications