கொல்கத்தா கேஸ்! பெரிய புயலே இனிமேல்தான் வரப்போகுது.. சந்திப் கோஷிடம் நடந்த "லை டிடக்டர்" சோதனை?
சென்னை: ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (ஆர்ஜிகேஎம்சிஎச்) முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம், பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நேற்று இரவு இரண்டாவது சுற்று பாலிகிராஃப் சோதனையை அவரிடமும் மேற்கொண்டது.
மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் (சிஎஃப்எஸ்எல்) குழுவால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் பல அதிர வைக்கும் உண்மைகள் வெளியே வரலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த வழக்கில் சஞ்சய் ராயிடம் ஏற்கனவே இந்த சோதனை நடத்தப்பட்டு விட்டது. ஆனால் சந்திப் கோஷிடம் நடத்தப்படவில்லை.

சந்திப் கோஷ் இந்த வழக்கில் நேரடியாக தொடர்பு கொண்டு இருக்கலாம். அவரும் இந்த விவகாரத்தில் தவறு செய்து இருக்கலாம் என்று புகார்கள் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் அவரிடம் நடத்தப்பட்ட சோதனை கண்டிப்பாக பல முக்கியமான திருப்பங்களை இந்த வழக்கில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன நடந்தது?: கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த சஞ்சய் ராய், அதே நாள் இரவில் வேறு ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கியதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. சிபிஐ விசாரணையில் இது தொடர்பாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். அதாவது மருத்துவரை பலாத்காரம் செய்யும் முன் அதே நாள் இரவு சஞ்சய் ராய் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
விசாரணையின் போது, சஞ்சய் ராய் குற்றம் நடந்த இரவில் தான் செய்ததை எல்லாம் விவரித்தார். நகரத்தில் இரண்டு சிவப்பு விளக்கு பகுதிகளுக்குச் சென்றதை ஒப்புக்கொண்டார், ஆனால் உடலுறவு கொள்ளவில்லை.
அதேபோல் வருகிற வழியில் தெருவில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதையும் செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்,. இது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கூடுதலாக, ராய் தனது காதலியுடன் வீடியோ கால் செய்ததாகவும், அவளிடம் நிர்வாண புகைப்படங்களைக் கேட்டதாகவும் தெரிவித்தார். அதற்கு அவர் புகைப்படங்களை அனுப்பியதாக என்று கூறப்படுகிறது.
சஞ்சய் ராய் சிபிஐயிடம் விவரித்தபடி, கொலை நடந்த இரவில் நடந்த நிகழ்வுகளின் வரிசை பின்வருமாறு:
ஆகஸ்ட் 8: சஞ்சய் ராய் RG கர் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நண்பரின் சகோதரனைப் பற்றி விசாரிக்க தனது நண்பருடன் அங்கே வந்துள்ளார்.
இரவு 11:15 மணிக்கு, ராயும் அவரது நண்பரும் மருத்துவமனையை விட்டு வெளியேறி மது அருந்த முடிவு செய்தனர். சாலையில் மது வாங்கி குடித்தனர்.
வடக்கு கொல்கத்தாவில் உள்ள சிவப்பு விளக்குப் பகுதியான சோனகாச்சியை பார்வையிட முடிவு செய்தனர். சோனகாச்சியில் பெண் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் தெற்கு கொல்கத்தாவில் உள்ள செட்லா என்ற சிவப்பு விளக்கு பகுதிக்கு செல்ல முடிவு செய்தனர்.
செட்லாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் ஒரு சிறுமியை அவர்கள் சில்மிஷம் செய்தனர்.
அதன்பின் செட்லாவில், சஞ்சய் ராய் சாலை ஓரத்தில் நின்று தனது காதலியுடன் வீடியோ கால் செய்துள்ளார். அவளின் நிர்வாண புகைப்படத்தையும் கேட்டுள்ளார். அதற்கு அவர் அனுப்பி உள்ளார்.
இன்னொரு பக்கம் அவரது நண்பர் செட்லாவில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார்.
இதையடுத்து சஞ்சய் ராயும் அவரது நண்பரும் மருத்துவமனைக்குத் திரும்பினர். சஞ்சய் ராய் நான்காவது மாடியில் உள்ள சோதனை மையத்திற்குச் சென்றார்.
அதிகாலை 4:03 மணியளவில், சஞ்சய் ராய் மூன்றாவது மாடியில் உள்ள செமினார் ஹாலுக்கு அருகிலுள்ள அறைகளுக்கு செல்வது சிசிடிவி காட்சிகளில் காணப்பட்டது.
பாதிக்கப்பட்ட அந்த பெண் தூங்கிக்கொண்டிருந்த செமினார் ஹாலுக்குநுழைந்த ராய், அவளை கழுத்தை நெரித்தார். அதன்பின் பெண்ணை சஞ்சய் ராய் பலாத்காரம் செய்துவிட்டு, அந்த இடத்தை விட்டு வெளியேறி, கொல்கத்தா காவல்துறை அதிகாரியான அனுபம் தத்தாவின் வீட்டிற்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications