இலக்கியப் பெரு விருந்து! நாட்படு தேறல் 2ம் பாகத்தின் கொண்டல் மேகம் பாடல் குறித்து வைரமுத்து கருத்து
சென்னை: நாட்படு தேறல் 2 ஆம் பாகத்தின் 3 வது பாடலான கொண்டல் மேகம் தமிழர்களுக்கு இலக்கியப் பெரு விருந்து என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்து இருக்கிறார்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் 2வது பருவத்தின் பாடல் தொடர் ஏப்ரல் 17 ஆம் தேதி துவங்கியது.
இந்த தொடரின் 3ம் பாடலாக ‛கொண்டல் மேகம்' மே 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. வைரமுத்துவின் வரிகளில் சைமன் கே கிங்கின் இசையில் ஷங்கர் மகாதேவன் குரலில் பரதன் இயக்கத்தில் இப்பாடல் தயாராகி இருக்கிறது.

100 பாடல்கள்
நாட்படு தேறல் என்ற பெயரில் வாரம் ஒரு பாடல் வீதம் 100 பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டு வருகிறார். 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் கவிப்பேரரசு வைரமுத்துவின் 100 பாடல்கள் வாரம் தோறும் வெளியாகி வருகின்றன. நாட்படு தேறல் ஒன்று பாட்டுத்தொடர் முடிவடைந்த நிலையில் நாட்படு தேறல் 2 பாட்டுத்தொடர் தற்போது மக்களை கவர்ந்துள்ளன. இந்த நாட்படு தேறல் பருவம் 2க்கான பாட்டுத்தொடர் ஏப்ரல் 17 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் கலைஞர், இசையருவி சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது.

கொண்டல் மேகம் பாடல்
ஏப்ரல் 17 ல் முதல் பாடல் வெளியானது. இந்த வரிசையில் 3ம் பாடல் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளது. ‛கொண்டல் மேகம்' எனும் தலைப்பில் இந்த வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடல் வரிகளுக்கு சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். பாடலை ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார். பாடலை இயக்குனர் பரதன் இயக்கியுள்ளார்.

கலைஞர்கள் கருத்து
இந்த பாடல் மே 1 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அதன் அறிமுக காட்சி இன்று வெளியாகி இருக்கிறது. அதில் பேசி இருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, "இந்த பாட்டு தமிழர்களுக்கு ஒரு இலக்கிய பெரு விருந்து" எனக் குறிப்பிட்டு இருக்கிறார். பாடகர் ஷங்கர் மகாதேவன் கூறுகையில், "வைரமுத்து மிகச்சிறந்த கவிஞர்" என பாராட்டி இருக்கிறார். "இந்த வார்த்தைகளை எந்த விதத்திலும் இசை கெடுத்துவிடக்கூடாது." என்ற நோக்கில் இசையமைத்ததாக சைமன் கே கிங் கூறி இருக்கிறார்.
|
என்னென்ன பாடல்கள்?
இந்த நாட்படு தேறல் பாகம் 2ல் ரோஜாவே தமிழ் பேசு..., அன்னம்மா பெத்தவளே ஆடு மேய்க்க போனவளே அந்தி மசங்கும் முன்னே ஆட வந்த மாயம் என்ன..., கனா கண்டேன்.., என்னைக்கு பொண்டாட்டி என்னை விட்டு போனாலே அன்னைக்கே என்படுக்கை திண்ணைக்கு வந்திடுச்சி..., ஆயிரம் தான் கவி சொன்னேன் அழகழகா பொய் சொன்னேன்... ஒவ்வொரு நாளும் உலகை திறக்கும் உதய கதிரே வணக்கம்.., கூந்தல் மேகம் ஒன்று கொண்டை ஏறி நின்று என பாடல்கள் அமைந்துள்ளன. இந்த பாடல்களில் தாய்ப்பாசம், காதல், மனைவியின் பிரிவு உள்பட பல்வேறு கருப்பொருட்களுடன் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலாக தற்போது வெளியிடப்பட்டு வருகிறது.

இயக்குநர்கள்
இயக்குனர்கள் யார் யார் முன்னதாக இந்த நாட்படுத்தேறல் 2ம் பருவத்தை பொறுத்தமட்டில் ஏற்கனவே பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பாடல் காட்சிகளை இயக்குனர் சிம்புதேவன், ‛மதயானைக்கூட்டம்' விக்ரம் சுகுமாறன், ‛பைரவா' பரதன், ‛சிட்டிசன்' சரவண சுப்பையா, ‛க/பெ ரண சிங்கம்' விருமாண்டி, இயக்குனர் தளபதி பிரபு, ரமேஷ் தமிழ்மணி, சரண், காந்தி கிருஷ்ணா, நடன இயக்குனர் ராதிகா, தேன்கணேஷ் விநாயகன், ‛காக்கா முட்டை' மணிகண்டன் ஆகியோர் இயக்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications