"இதுதான் முக்கியம்".. ஸ்டாலின் போட்ட உத்தரவு.. வரப்போகும் "கன்ட்ரோல்".. களத்தில் தயாரான மா.செக்கள்!
சென்னை: 9 மாவட்டங்களில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலோடு சேர்த்து திமுக தற்போது மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களுக்கும் தீவிரமாக தயாராகி வருகிறது. ஆளும் கட்சியான திமுகவிற்கு இது ஒரு வகையில் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு பின் உடனே மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடக்கும், மேயர் தேர்வுக்கான மறைமுக தேர்தலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரிசையாக நடக்க உள்ள இந்த தேர்தல்களைத்தான் திமுக குறி வைத்துள்ளது.

மேயர்
முக்கியமாக தமிழ்நாடு முழுக்க பெருவாரியான மேயர் பதவிகளை கைப்பற்றும் முடிவில் திமுக உள்ளது. இதனால்தான் மற்ற கட்சிகளுக்கு முன்பாக முதல் ஆளாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டது. இதில் திமுக ஆளும் கட்சி என்பதை தாண்டி மிக முக்கியமான பலப்பரீட்சை ஒன்றை எதிர்நோக்கி உள்ளது... அது கொங்கு மண்டலம்!

கொங்கு
கொங்கு மாவட்டங்களில் அதிக பதவிகளை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு உள்ளது. கொங்கு மண்டலத்தில் திமுக வலுவாக இல்லை என்ற பிம்பம் உள்ளது. இதை உடைக்கும் விதமாக மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளுக்கான தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் முடிவில் திமுக இறங்கி உள்ளது. அதை காரணமாகி வைத்தே முக்கிய கொங்கு தலைகளை மற்ற கட்சிகளில் இருந்து திமுக தூக்கி வருகிறது.

பலர்
ஏற்கனவே கரூரில் அதிமுக கவுன்சிலர்கள் 10 பேர் வரை திமுக பக்கம் வந்துவிட்டனர். இன்னொரு பக்கம் மகேந்திரனின் வருகை, தற்போது தோப்பு வெங்கடாச்சலம் வருகை என்று திமுகவில் வரிசையாக முக்கிய தலைகள் இணைந்து வருகிறார்கள். கொங்கில் திமுகவை பலப்படுத்தும் வகையில் முக்கிய நிர்வாகிகள் இப்படி வரிசையாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஏன்
கொங்கு நாடு என்ற கோரிக்கையை பாஜக எழுப்ப தொடங்கி உள்ளது தமிழ்நாடு முழுக்க மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக இதற்கு எதிராக கருத்து தெரிவிக்காத நிலையில், திமுக கொங்கு மண்டலத்தில் தனது வலிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மொத்தமாக கொங்கு மண்டல நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பதவிகளை கைப்பற்றும் முடிவில் திமுக உள்ளது.

பதவி
கொங்கு மண்டலத்தில் அடிப்படை பதவிகளை கைப்பற்றினால் கட்சி ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் திமுக அங்கு தனது பலத்தை நிரூபிக்கும். உள்ளாட்சி தேர்தலுக்கு பின் இதுபோன்ற பிரிவினை குரல்களும் இருக்காது என்று திமுக நம்புகிறது. பிரிவினைவாத கருத்துக்களுக்கு திமுகவின் வெற்றி பதிலடியாக அமையும் என்று கட்சி கருகிறது. இதனால் இப்போதே கொங்கு மண்டலத்தில் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் தீவிரமாக இயங்கி வருகிறது.

மா. செக்கள்
கொங்கு கண்ட்ரோலில் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அரசு நினைக்கிறது. உள்ளூர் நிர்வாகத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது நிர்வாக ரீதியாக கட்சியை வலுப்படுத்த உதவும் என்று திமுக நம்புகிறது. புதிய நிர்வாகிகளின் வருகை, செந்தில் பாலாஜி எழுச்சி திமுக சுறுசுறுப்பாக இயங்க தொடங்கி உள்ளது. கொங்கு மண்லடத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் இப்போதே தேர்தல் பணிகளை தீவிரமாக கவனிக்க தொடங்கிவிட்டனர்.

உத்தரவு
கடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலேயே திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலினும், துரைமுருகனும் இது தொடர்பாக உத்தரவிட்டுவிட்டதாக தெரிகிறது. சட்டசபை தேர்தலில் நடந்தது போல நடக்க கூடாது. கொங்கு மண்டலத்தில் சறுக்கியது போல சறுக்க கூடாது என்று உத்தரவு பறந்துள்ளதாக தெரிகிறது. இந்த தேர்தலை திமுக சட்டசபை தேர்தலுக்கு இணையாக கருதுவதாக கூறப்படுகிறது.
-
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி












Click it and Unblock the Notifications