பாஜக அரசுக்கு கொங்கு ஈஸ்வரன் திடீர் பாராட்டு! கூட்டணி ரூட்டில் மாற்றம்? பின்னணி என்ன?
சென்னை: மத்திய பாஜக அரசு மீது எப்போதும் பாய்ச்சல் காட்டும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இப்போது திடீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடைவிதித்திருப்பது இந்திய அரசு சரியான நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் ஈஸ்வரன் அங்கம் வகித்து வரும் சூழலில், பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை தொடர்பான அவரது அறிக்கையில் மத்திய அரசை பாராட்டியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு;

பிளாஸ்டிக் பொருட்கள்
''கடந்த பல வருடங்களாக ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பதற்கு தடை என்ற நிலை இருந்து வந்தது. மக்கள், சமூக ஆர்வலர்கள் விற்பனைக்கு தடை என்பதை விட உற்பத்திக்கு தடை விதித்தால் எதிர்பார்க்கின்ற தீர்வு கிடைக்கும் என்ற பரிந்துரைகளை சொல்லி வந்தனர். இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் காதுக்கு இந்த கோரிக்கைகள் சென்று சேர்ந்து எதிர்பார்த்தது நடந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.''

சரியான நடவடிக்கை
''உற்பத்தியை நிறுத்தினால் விற்பனை தானாக நின்று போகும் என்பதை எல்லோரும் அறிவர். இந்திய அரசு சரியான நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது. எந்த தயவு தாட்சணையும் இல்லாமல் இந்தியா முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தடுக்கப்படவேண்டும்.''

சுற்றுச்சூழல் பாதுகாப்பு
''சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலையில் இரும்புக்கரம் கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி ஆலைகள் மூடப்படுமென்றால் சுற்றுச்சூழல் கண்டிப்பாக பாதுகாக்கப்படும். அதே சமயத்தில் ஆராய்ச்சியாளர்கள் முடுக்கி விடப்பட்டு பிளாஸ்டிக் பைகளுக்கு இணையான சரிசமமான விலையுள்ள பொருட்கள் உருவாக்கப்பட வேண்டும்.''

கொமதேக
''ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை அறிவிப்பு சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கான முதலில் எடுத்து வைத்திருக்கின்ற தீவிரமான நடவடிக்கையாகும். அதை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக வரவேற்கின்றோம்.''
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications