தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை முழுமையாக தடுக்கப்படவில்லை! கொங்கு ஈஸ்வரன் வெளிப்படை குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை முழுமையாக இன்னும் தடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் நேற்றைய அறிவிப்பும் தாம் கூறுவதை தான் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஈஸ்வரன் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;

ஆகஸ்ட் 11

ஆகஸ்ட் 11

வருகிற 11 ஆம் தேதி போதைப்பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்தவேண்டுமென்ற முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்புக்குறியது. சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிரம் காட்ட வேண்டுமென்ற முதலமைச்சரின் வேண்டுகோள் காலத்தின் தேவை.

போதைப்பொருள் விற்பனை

போதைப்பொருள் விற்பனை

போதைப் பொருள் விற்பனையை தடுக்க கடுமையான சட்டம் வேண்டும். துனை போகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் தேவை. முதலமைச்சரின் சாட்டை வேகமாக சுழற்றப்பட்டால் போதைப் பொருள் நடமாட்டம் கட்டுக்குள் வரும். போதைப்பொருள் விற்கப்படுவது முழுமையாக தடுக்கப்படவில்லை என்பது உண்மை.

அதிகாரிகள் ஒத்துழைப்பு

அதிகாரிகள் ஒத்துழைப்பு

முதலமைச்சரின் அறிவிப்பும் அதைத்தான் காட்டுகிறது. போதைப்பொருள் பயன்படுத்துவது தான் பல்வேறு குற்றங்களுக்கான காரணம் என்பதை எல்லோரும் அறிவோம். சம்பத்தப்பட்ட அதிகாரிகள் முழு ஒத்துழைப்புக் கொடுத்தால் தான் இது சாத்தியமாகும். இதை அரசு உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் நடத்தப்படப் போகும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முதலமைச்சர் எதிர்பார்க்கின்ற பலனை நிச்சயமாக கொடுக்கும். இவ்வாறு ஈஸ்வரன் கூறியிருக்கிறார்.

கூட்டணிக் கட்சி

கூட்டணிக் கட்சி

திமுக -கொமதேக கூட்டணியில் விரிசல் ஏதும் ஏற்பட்டதா எனத் தெரியவில்லை, ஆனால் அண்மைக்காலமாக கொங்கு ஈஸ்வரன் சில கருத்துக்களை கூட்டணிக் கட்சியின் ஆட்சிக்கு எதிராக மிகவும் வெளிப்படையாக கூறி வருகிறார் என்பது மட்டும் கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+