ஒரு பக்கம் வேலைக்கு ஆளில்லை! ஒரு பக்கம் வேலை கிடைக்கவில்லை! எல்லாம் மாறட்டும்! ஈஸ்வரன் மே 1 வாழ்த்து
சென்னை: உழைக்கும் வர்க்கத்தின் உரிமை குரல் ஓங்கி ஒலித்து உழைப்பாளர்களின் வாழ்வு மேம்பட இந்த மே தினத்தில் உறுதியேற்போம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈஸ்வரன் விடுத்துள்ள மே தினம் வாழ்த்து வருமாறு;
''காலம் மாற மாற காலத்திற்கு ஏற்ற மாற்றங்களையும், மேம்பாடுகளையும் பெற்று எல்லா மக்களோடும் சரி சமமான வாழ்வாதாரத்தை பெற வாழ்த்துக்கள்.

வேலைக்கு ஆள் இல்லை என்று ஒரு பகுதியும் வேலை கிடைக்கவில்லை என்று மற்றொரு பகுதியும் வேதனைப்படும் சூழல் நிலவுகிறது.
சரியான தொடர்புகளை ஏற்படுத்தி படித்த படிப்பிற்குரிய வேலையை அனைவரும் பெற உறுதி எடுத்து உழைப்போம்.
முதலீடுகளும், தொழிற்சாலைகளும் வெறும் வேலை வாய்ப்பை உருவாக்குவதில்லாமல் இந்த மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு வேலை கொடுக்கக் கூடியதாக அமைய முயற்சிப்போம்.
படிக்கும் போதே தொழிற்சாலைகளுக்கு சென்று பயிற்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பை முறையாக செயல்படுத்தி பயன்பெறுவோம்.
அனைவருடைய உழைப்பும் நோக்கமும் அவரவருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைய இந்த மே தினத்தில் அனைவரையும் வாழ்த்துகிறோம்.''
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications