Kovalam Beach: தொடர்ந்து 5வது முறையாக.. நீலக்கொடி சான்றிதழை தட்டித் தூக்கிய கோவளம் கடற்கரை
சென்னை: சர்வதேச அளவில் தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை அருகே உள்ள பிரபலமான சுற்றுலாத் தளமான கோவளம் கடற்கரைக்கு ஐந்தாவது முறையாக நீளக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தூய்மை, சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், பார்வையாளர் பாதுகாப்பு, சிறப்பு வசதிகளின் அடிப்படையில் கடற்கரைகள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச அளவில் அங்கீகரிக்கும் வகையில் நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. சர்வதேச அமைப்புகளின் மூலமாக பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட ஆண்டுதோறும் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கடற்கரையின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.

சென்னைக்கு அருகே உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றானது கோவளம் கடற்கரை. இந்த கடற்கரைக்கு தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நீலக் கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை டென்மார்க் நிர்ணயித்த உலகத் தரங்களை, கோவளம் கடற்கரை மீண்டும் பூர்த்தி செய்துள்ளது என்று ப்ளூ பிளாக் இந்தியா தேசிய அமைப்பாளர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்துள்ளார்.
கோபம் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இங்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூங்கில் நிழற்குடைகள், நாற்காலிகள், உடை மாற்றும் அறைகள், கழிப்பறைகள், மிதக்கும் சக்கர நாற்காலிகள் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ள. அதேபோல, காலை 6 முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் கண்காணிப்பு அமைப்புகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கோவளம் கடற்கரைக்கு 2024-25 ஆம் ஆண்டில் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர். இதேபோல, தமிழ்நாட்டில் உள்ள பல கடற்கரைகளுக்கும் விரைவாக சான்றிதழ் பெற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கடற்கரை எந்த அளவிற்கு தூய்மையாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறைந்ததாக உள்ளதைக் காட்டும் வகையில் இந்த ப்ளூ பிளாக் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு கூறுகையில், உலகளாவிய சான்றிதழைப் பெறுவதற்காக தமிழ்நாட்டில் 10 கடற்கரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில், சென்னையில் 4, கடலூரில் 2, விழுப்புரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடியில் தலா ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கோவளம் கடற்கரை தொடர்ந்து ஐந்தாவது முறையாக நீலக்கொடி சான்றிதழ் பெற்றதற்கு தமிழக அரசின் அர்ப்பணிப்பு மற்றும் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications