கோயம்பேடு மீண்டும் பிஸி.. சென்னை கிளாம்பாக்கத்திலும் கூட்டம்.. வார விடுமுறையில் தமிழக அரசு சர்ப்ரைஸ்
சென்னை: இன்று முதல் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. இது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.
பணிநிமித்தம், கல்வி, உட்பட பல்வேறு காரணங்களுக்காக, சொந்த ஊரிலிருந்து பொதுமக்கள் நகரங்களுக்கு கிளம்பி செல்வது வழக்கம்.. அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற தொழிற்நகரங்களில் வெளியூர் மக்கள் ஏராளமானோர் தங்கியிருக்கிறார்கள்.

இவர்கள் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம்..
அந்தவகையில், இன்று நவம்பர் 15ம் தேதி பௌர்ணமியாகும்.. வழக்கமாக பவுர்ணமி என்றால சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திருவண்ணாமலை, சதுரகிரி, கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு பொதுமக்கள் அதிக அளவில் செல்வது வழக்கமாகும். எனவே, பக்தர்களுக்கான சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்திருக்கிறது.
விடுமுறை தினங்கள்: அதுபோல, நாளையும், நாளை மறுநாளும் வார இறுதி நாட்களாகும்.. இந்த விடுமுறை தினங்களிலும், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
அந்தவகையில், தொடர்ந்து 15, 16, 17 என 3 நாட்களும் தொடர் விடுமுறை வருகிறது. இதனை முன்னிட்டும், நெரிசல் இல்லாமல் பயணிகள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பௌர்ணமி: அந்த அறிவிப்பில்," 15/11/2024 (வெள்ளிக் கிழமை) பௌர்ணமி, 16/11/2024 (சனிக்கிழமை) வார விடுமுறை என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 15/11/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 460 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
கோயம்பேடு: 16/11/2024 (சனிக்கிழமை) அன்று 245 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 15/11/2024 மற்றும் 16/11/2024 ( வெள்ளி மற்றும் சனிக் கிழமை) அன்று 81 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பௌர்ணமியை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 15/11/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 265 பேருந்துகளும் 16/11/2024 (சனிக்கிழமை) அன்று 85 பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 15/11/2024, 16/11/2024 அன்று 11 பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 15/11/2024, 16/11/2024 அன்று 05 பேருந்துகளும், ஆக 366 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு பஸ்கள்: மேற்படி, ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக் கிழமை அன்று 5,969 பயணிகளும் சனிக்கிழமை அன்று 2,973 பயணிகளும் திங்கள் கிழமை அன்று 7,080 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கண்காணிப்பு: இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications