கோயம்பேடு மாறுது.. சொன்ன மாதிரியே சென்னை கோயம்பேட்டில் மெகா "பார்க்" வருது.. இந்த இடம்தானா.. ஹேப்பி
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் புதிய மாற்றம் தென்பட துவங்கியிருக்கிறது.. அனைவராலும் பெரிதும் எதிர்நோக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட பூங்காவிற்கான பணி துவங்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு "காலி"யானதிலிருந்தே, பூங்கா அமைப்பது குறித்த பேச்சுக்கள் பலமாக எழுந்து வந்தன.. இந்த பகுதியில் லுலு மால் கட்டிடம் வரப்போவதாக சொன்னார்கள்.. ஆனால் அது புரளி என்று நிரூபணமானது.

கோயம்பேடு: அடுத்ததாக, கோயம்பேட்டில் பசுமை பூங்காவைத் தவிர வேறு எந்த கட்டுமானங்களும் வரக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி விடாமல் கோரிக்கை விடுத்துக் கொண்டேயிருந்தார்.
இதனிடையே, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தொழிலாளர்களின் வசதிக்காக அவசர சிகிச்சை பிரிவு மற்றும் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசிப்பதாகவும் தெரிகிறது. தொழிலாளா்கள் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ளவா்கள் பயனடையும் வகையில், ஏற்கனவே ரூ.86 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படுகிறதாம்.
சந்தை வளாகம்: அதுபோலவே, கோயம்பேட்டில் 7 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பூங்கா ஒன்றை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. கோயம்பேடு சந்தை வளாகத்தை அழகுபடுத்தும் விதமாக, பூ சந்தை வளாகத்தில் 7 ஏக்கரில் இந்த பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் திட்டமிட்டு, தற்போது அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டதாம்.
இந்த பிரம்மாண்ட பூங்காவில், வாக்கிங் செய்வதற்கான இடம், ஜாக்கிங் செய்வதற்கான பாதை , குழந்தைகள் விளையடுவதற்கான இடங்கள், பசுமை சூழ்ந்த செடிகள், மரங்கள், செயற்கை நீரூற்றுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நவீன பூங்காவை அமைக்க சிஎம்.டிஏ அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்களாம்.
சென்னை மகிழ்ச்சி: கோயம்பேடு வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் என கிட்டத்தட்ட இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலை செய்து வருகின்றனா்.. இங்கு 7 ஏக்கரில் பூங்கா அமைக்கப்படுமானால், இது கோயம்பேடு தொழிலாளர்கள் உட்பட சுற்றுப்புறங்களில் உள்ளோருக்கும் பெரிதும் பயனளிப்பதாக இருக்கும்... அத்துடன் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு வருபவர்களும் இந்த பூங்காவில் சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டும் செல்லலாம்
மருத்துவமனைப்பணிகள் விரைவில் நிறைவு பெற்று செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், பூங்காவும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என கோயம்பேடு சந்தை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்த 2 பணிகளும் முடிவடைந்துவிட்டால், சென்னையில் தவிர்க்க முடியாத அடையாளமாக கோயம்பேடு நிலைத்துவிடும்...!!!












Click it and Unblock the Notifications