Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்பேடு காலி.. சென்னையை "தாங்கிய" வரலாறு.. பொசுக்குனு காணாம போச்சே.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு வெறிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு போட்டோக்களும், வீடியோக்களும்தான், இந்த நாட்களாகவே, இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை மக்களின் பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும், அந்த நிலத்தை பூங்காவாக மாற்ற வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்து வருகிறார்.

"கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மொத்த பரப்பு 36 ஏக்கர் தனியார் பேருந்து நிலையம் 6.8 கோயம்பேடு சந்தை பூங்கா 7.6 ஏக்கர் கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தம் 66.4 ஏக்கர் நிலம் கிடைக்கும்.. அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூபாய் 13,200 கோடியாகும்.

Koyambedu Bus Stand is deserted due to New Kilambakkam Bus Terminus in Chennai

கோயம்பேடு: இவ்வளவு அதிக மதிப்புள்ள மக்களுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு தாரை பார்ப்பதை அனுமதிக்க முடியாது. மாறாக அந்த நிலத்தை பூங்காவாக மாற்றுவதே சரியாகும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுஒருபக்கமிருந்தாலும், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு பார்ப்பதற்கே வெறிச்சோடி காணப்படுகிறது.. இங்குள்ள 6 பிளாட்பாரம்களில் 2100 பஸ்கள் தினமும் இயங்கிவந்ததால், எப்போதுமே பயணிகள் கூட்டம் ஜெ.ஜெ.வென இருக்கும். ஆனால், சென்னையில் டிராபிக்கை குறைக்க வேண்டும் என்பதற்காக, கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ளது.

Koyambedu Bus Stand is deserted due to New Kilambakkam Bus Terminus in Chennai

விரைவு பஸ்கள்: அதனால், அரசு விரைவு பஸ்கள் உட்பட ஆம்னி பஸ்கள் எல்லாமே கிளாம்பாக்கத்துக்கு போய்விட்டன. விழுப்புரம், கும்பகோணம் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்பட்ட அரசு பஸ்கள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட நிலையில், இதிலும், 80 சதவீத பஸ்கள் நேற்று முதல் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு சென்றுவிட்டன. மிச்சமுள்ள 20 சதவீத பஸ்கள் மாதவரம் புறநகர் பஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டன.

எனவே, பூந்தமல்லி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் குறைந்த எண்ணிக்கையிலான எஸ்இடிசி மற்றும் டிஎன்எஸ்டிசி பஸ்கள் மட்டுமே கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

கோயம்பேடு: அதாவது, காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.இந்த பஸ்களும் இரவு நேரத்தில் செல்வதால், பகல் நேரத்தில் கோயம்பேட்டில் கூட்டமே இருப்பதில்லை..

பஸ் ஸ்டாண்டு முழுவதும் பயணிகள் குறைவாக உள்ளதை காண முடிகிறது. பயணிகள் கூட்டம் இல்லாததால், இதுவரை அங்கு செயல்பட்டு வந்த ஓட்டல்கள், டீக்கடைகள், ஸ்நாக்ஸ் கடைகள் உட்பட பல கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், பஸ் ஸ்டாண்டு காலியாக தென்படுகிறது.

ஏக்கம்: தினமும் காலை முதல் நள்ளிரவு வரை திருவிழாக்கூட்டம்போல, பரபரப்பாகவும், பிஸியாகவும் இதுநாள்வரை காணப்பட்ட கோயம்பேடு, இப்போது ஆள் நடமாட்டமே வெறிச்சோடிவிட்டது.. இப்படி காலியான பஸ் ஸ்டாண்டை இதுவரை சென்னைவாசிகள் பார்த்தது இல்லை.. இதனால், இந்த 4 நாட்களாகவே, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், அந்தப்பக்கமாக கடந்து செல்லும்போது, ஏக்கமாகவும், வருத்தமாகவும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை பார்த்தபடியே செல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+