கோயம்பேடு போச்சே.. கிளாம்பாக்கத்துக்கு எப்படி போறது? வெளியேறிய வியாபாரிகள், சென்னை பஸ் ஸ்டாண்டு காலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில், கடைகளை காலி செய்து கொண்டு வியாபாரிகள் கிளம்பி செல்லும், வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது.

சென்னையில் டிராபிக்கை குறைக்க வேண்டும் என்பதற்காக, கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ளது. அதனால், அரசு விரைவு பஸ்கள் உட்பட ஆம்னி பஸ்கள் எல்லாமே கிளாம்பாக்கத்துக்கு போய்விட்டன.

Koyambedu Bus Station current situation and How can we go Chennai Kilambakkam Bus Stand, asks merchants

பூந்தமல்லி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் குறைந்த எண்ணிக்கையிலான எஸ்இடிசி மற்றும் டிஎன்எஸ்டிசி பஸ்கள் மட்டுமே கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

கோயம்பேடு: அதாவது, காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.இந்த பஸ்களும் இரவு நேரத்தில் செல்வதால், பகல் நேரத்தில் கோயம்பேட்டில் கூட்டமே இருப்பதில்லை..

பஸ் ஸ்டாண்டு முழுவதும் பயணிகள் குறைவாக உள்ளதை காண முடிகிறது. பயணிகள் கூட்டம் இல்லாததால், இதுவரை அங்கு செயல்பட்டு வந்த ஓட்டல்கள், டீக்கடைகள், ஸ்நாக்ஸ் கடைகள் உட்பட பல கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், பஸ் ஸ்டாண்டு காலியாக தென்படுகிறது. இங்குள்ள 6 பிளாட்பாரம்களில் 2100 பஸ்கள் தினமும் இயங்கிவந்ததால், எப்போதுமே பயணிகள் கூட்டம் ஜெ.ஜெ.வென இருக்கும். இப்போது வெறிச்சோடி காணப்படுகிறது..

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் + கோயம்பேடு இரு பஸ் ஸ்டாண்டு விவகாரங்களினால், வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். கடந்த 4 நாட்களுக்கு முன்பு, பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்டின் நடைபாதை வியாபாரிகள், அமைச்சர் சிவசங்கர் காலில், கண்ணீர் மல்க ஒரு கோரிக்கை வைத்திருந்தனர்.

இவர்கள் பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்டிலேயே பழம், வாட்டர் பாட்டில் போன்றவற்றை விற்பனை செய்து வருபவர்கள்.. இவர்களுக்கு கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள்: அதனால்தான், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு அருகே தங்களை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு, அந்த பெண்கள் அமைச்சரிடம் முறையிட்டனர். இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சிவசங்கர் அந்த பெண்களிடம் உறுதி தந்திருக்கிறார்.

அதுபோலவே, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு வியாபாரிகளும் முக்கிய கோரிக்கையை விடுத்து வருகிறார்கள்.. இந்த பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் ஏராளமான ஸ்நேக்ஸ் கடைகள், ஓட்டல்கள், எலக்ட்ரானிக் கடைகள் என எப்போதுமே நிறைந்திருக்கும்.. தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடை வைத்துக்கொண்டிருந்த கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அனைவரும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் கிட்டத்தட்ட 70 சதவீதம் வருமானம் குறைந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

மிஸ்ஸிங்:
'ஹை ப்ராண்ட்' கடைகளுக்கு மட்டுமே இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கும் கிளாம்பாக்கத்தில் கடைகளை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்கள். பிளாட்பார்ம் வியாபாரிகள், கடைகளை காலி செய்து கொண்டு, சோகத்துடன் கிளம்பும் காட்சிகளும் வீடியோவாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
"இதுவரை நிம்மதியா பிழைப்பு நடத்திட்டு இருந்தோம்.. இப்போ கிளாம்பாக்கத்துக்கு போயிட்டாங்க.. நாங்கள் ஆட்டோ டிரைவர்கள் எப்படி கிளாம்பாக்கத்துக்கு போக முடியும்? 32 கிலோ மீட்டருக்கு இங்கிருந்து கிளம்பி போகணும்.. அப்படியே போனாலும் எங்களுக்கு சவாரி கிடைக்குமா?ன்னு தெரியாது. விழிவிதுங்கி போயிருக்கோம்" என்கிறார்கள் ஆட்டோ ஓட்டுநர்கள்.

நம்பிக்கை: எனினும், பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்டு வியாபாரிகளுக்கு, வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்து தருவதாக அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டிருப்பதுபோல், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு வியாபாரிகளின் வாழ்வாதாரமும் காக்கப்படும் என்று நம்பப்படுகிறது. ஆனாலும், பயணிகளின் பரபரப்பு டென்ஷனும், பஸ்களின் ஹாரன் சத்தமும் கோயம்பேட்டில் இப்போது மிஸ்ஸிங்..!!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+