எப்படி இருந்த பங்காளி நீ! கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம்.. இப்போ எப்படி இருக்கு பாருங்க!
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில் வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் அங்கிருந்தே கிளம்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்துகள் நிலையம் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
வெளியூர் செல்வது என்றாலே அடுத்து பயணிகள் நினைவுக்கு வருவது கோயம்பேடு பேருந்து நிலையம் தான். பயணிகள் பலரும் சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து அடித்து பிடித்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு வந்து மதுரை, திருச்சி, நெல்லை என தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பேருந்தை பிடித்து பயணிப்பார்கள். விடுமுறை காலங்களில் திருவிழா கூட்டம் போல பேருந்து நிலையம் காணப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விரைவு பேருந்துகள் செல்லும் நுழைவு வாயிலுக்கு செல்லும் சாலையின் எதிர்திசையில் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கான நிலையம் இருந்தது. சொகுசான பயணம், சரியான நேரத்திற்கு ஊருக்கு போய்விடலாம் என்பதால் கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும் பயணிகள் பலரும் ஆம்னி பேருந்துகளில் செல்ல விருப்பப்படுகிறார்கள். இதனால் கோயம்பேடு அரசு பேருந்துகளுக்கு நிகராக ஆம்னி பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலைய வாசலில் இருந்தே பயணிகள் லக்கேஜ்களுடன் செல்வதை பார்க்கலாம். வண்ண வண்ண நிறங்களில் அலங்கார விளக்குகளுடன் காதை பிளக்கும் ஹார்ன் சத்தத்துடன் ஆம்னி பேருந்துகளும் வெளியே செல்வதும் வருவதும் என எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும். அதுவும் மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை வரிசையாக ஆம்னி பேருந்துகள் செல்வதை பார்க்கலாம். ஆம்னி பேருந்து நிலையத்தை சுற்றிலும் உள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டும்.
தற்போது நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால்,சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை அரசு திறந்துள்ளது. அரசு பேருந்துகள் முதல் ஆம்னி பேருந்துகள் வரை தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கிருந்தே இயக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தற்போது ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகிறது.

இதனால், எப்போதும் பரபரப்பாக காட்சி அளித்துக் கொண்டு இருந்த ஆம்னி பேருந்து நிலையம் தற்போது ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. லக்கேஜ்களை ஏற்றுவதும்.. பஸ்களை கழுவதும் என பகல் நேரங்களில் கூட பரபரப்பாக காட்சி அளித்த பேருந்து நிலையம், இரவு நேரத்தில் கூட ஆளின்றி கிரிக்கெட் மைதானம் போல காட்சி அளிக்கிறது. ஒன்றிரண்டு காலி பேருந்துகள் மட்டுமே உள்ளே நிற்கின்றன.
சாதாரண நாட்களில் கூட இரவு நேரத்தில் திரும்பும் பக்கமெல்லாம் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டமாக காணப்படும். ஆனால் தற்போது அந்த பகுதியே மயான அமைதியாக காட்சியளிக்கிறது. எப்போதும் பரபரப்பாக இருந்த ஆம்னி பேருந்து நிலையத்தை பார்த்த அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தற்போது வாழ்ந்து கெட்டவரை பார்ப்பது போல வருத்தத்துடன் பார்த்து செல்கிறார்கள்..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications