சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேட்ட சீட் கிடைச்சாச்சு.. ஆனா ரெட்டியை எப்படி சமாளிக்கிறது.. கவலையில் கேபி முனுசாமி

Google Oneindia Tamil News

சென்னை: கேட்ட சீட் கிடைச்சாச்சு.. ஆனா ரெட்டியை எப்படித்தான் சமாளிச்சு கிருஷ்ணகிரியில் கேபி முனுசாமி ஜெயிக்க போகிறாரோ என்று தொகுதி மக்கள் உன்னிப்பாக பார்த்து வருகிறார்களாம்!

கிருஷ்ணகிரி தொகுதியை பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் கேபி முனுசாமி களம் காண உள்ளார். அன்று ஜெயலலிதாவின் நெருக்கடியான காலகட்டத்தில் மிகவும் உதவியாக இருந்தவர் இவர்தான்!

அதனால் ஜெ.வின் ஆதரவையும் அபிமானத்தையும் எளிதாகவே பெற்றார். அன்றிலிருந்து இவருக்கு என்று கட்சியிலும் சரி, தொகுதியிலும் சரி.. ஒரு செல்வாக்கு இருக்கத்தான் செய்கிறது.

[39 தொகுதிகளும் நுனி விரலில்.. ஒன்இந்தியா தமிழில்]

டாக்டர் செல்லக்குமார்

டாக்டர் செல்லக்குமார்

இவருக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சி யாரை நிறுத்த போகிறது என்று தெரியவில்லை. ஏனெனில் கிருஷ்ணகிரி தொகுதிக்கு காங்கிரசில் நிறைய போட்டி உள்ளது. டாக்டர் ஏ.செல்லக்குமார், நடிகை குஷ்பு, ஈவிகேஎஸ் என லிஸ்ட் பெரிசாக உள்ளது.

பாலகிருஷ்ண ரெட்டி

பாலகிருஷ்ண ரெட்டி

இதில் டாக்டர் செல்லக்குமாருக்கே வாய்ப்பு அதிகம் என தெரிகிறது. ஒருவேளை செல்லக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும், உண்மையிலேயே கேபி முனுசாமிக்கு ஆபத்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மூலமாக வரும் என்று கூறப்படுகிறது.

DMK vs AIADMK: திமுக vs அதிமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள் DMK vs AIADMK: திமுக vs அதிமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்

உள்ளடி வேலை

உள்ளடி வேலை

ஏற்கனவே பதவி போனவர் பாலகிருஷ்ணா ரெட்டி. சட்டமன்ற தேர்தலில் தன் மனைவி போட்டியிட வாய்ப்பு கிடைத்துவிட்டாலும், எம்பி பதவி என்பது பெரிய விஷயம். இன்றைக்கு தனக்கு எந்த செல்வாக்கும் இல்லாத நிலையில் நாளை கேபி முனுசாமி ஜெயித்துவிட்டால், தொகுதியில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று நினைக்கிறாராம். அதனால் கேபி முனுசாமிக்கு எதிராக உள்ளடி வேலைகளை தொடங்க ஆரம்பித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

ரெட்டி சிக்கல்

ரெட்டி சிக்கல்

ஆனால் இந்த தேர்தலில் "எக்கச்சக்கமான" விஷயங்களை செய்து எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளாராம் கேபி முனுசாமி. அதனால் எவ்வளவு சிக்கல் ரெட்டி மூலம் வந்தாலும் அதை சமாளிக்கவும் தயாராகவே இருக்கிறாராம்.

English summary
Bala Krishna Reddy is said to be involved in defeating KP Munusamy in the Krishnagiri constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X