"புல் பவர்" தந்த ஸ்டாலின்.. டேவிட்சன் தேவஆசீர்வாதம் எல்லாத்துக்கும் காரணம்! கே.பி. ராமலிங்கம் பரபர
கேபி ராமலிங்கம் திமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டை இன்று தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழ்நாட்டை உடனடியாக காப்பாற்ற வேண்டும், அது தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி இருக்கிறது என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் குற்றஞ்சாட்டி உள்ளார்..
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக திமுக அரசை கடுமையாக சாடி வருகிறது.. அதிமுக செய்ய வேண்டிய போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை பாஜக செய்து வருகிறது.
ஏற்கனவே திமுகவின் ஊழல் புகார்களை மாநில தலைவர் அண்ணாமலை பொதுவெளியில் பகிரங்கப்படுத்தி வருகிறார்...

லிஸ்ட் - கலக்கம்
மேலும், மாதந்தோறும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தார்.. கடந்த ஜுன் மாதம் அண்ணாமலை இவ்வாறு சொல்லியிருந்த நிலையில், இந்த மாதம் எந்த அமைச்சர் பெயரை அவர் வெளியிட போகிறார் என்ற கலக்கம் திமுகவில் சூழ்ந்து வருகிறது.. அதிமுகவை சிக்க வைக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்தால், திமுகவுக்கே செக் வைக்க பாஜக முனைப்பு காட்டி வருவதால், தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி வருகிறது!

அண்ணாமலை
இதனிடையே, ஆளுநரை அடிக்கடி சந்தித்து பாஜக மாநில தலைவர்கள் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அண்ணாமலை இன்று ஆளுநரை சந்தித்தார்... ஆளுநருடன் சுமார் 70 நிமிடம்வரை இந்த சந்திப்பு நடந்தது... பிறகு, ஆளுநர் மாளிகையில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது:

கேள்விக்குறி
தமிழ்நாட்டில் தொடர்ந்து அசாதாரண நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது.. தமிழகத்தில் நடக்கும் தேச விரோத செயல்கள் குறித்து ஆளுநரிடம் புகார் தந்துள்ளோம்.. தேச விரோத செயல்களால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.. தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலை விரித்தாடுகிறது. தீவிரவாதிகளுக்கு போலியாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது, இதற்கு காவல்துறை முக்கிய அதிகாரிகளே உடந்தையாக இருக்கிறார்கள்...

பாஸ்போர்ட்
விமானப்படை தளபதி வீட்டு முகவரி பெயரிலேயே போலியாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.. இப்படி மொத்தம் 200 பாஸ்போர்ட்டுகள் போலியாக தரப்பட்டுள்ளன. போலி பாஸ்போர்ட் விவகாரத்திற்கு உளவுத்துறை அதிகாரி டேவிட்சன் ஆசீர்வாதம்தான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.. அவரைப்போன்ற தவறான அதிகாரிகள் உளவுத்துறையில் இருப்பதால்தான் கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது..

டேவிட்சன்
டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்தை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்... அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். இதற்கான ஆதாரங்களையும் ஆளுநரிடத்தில் வழங்கி இருக்கிறோம்.. நிச்சயம் அவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் தீவிரவாதியின் பிடியில் சிக்கி இருக்கிறது.. இப்போது தமிழகத்தை உடனடியாக மீட்க வேண்டும்.. நேற்று நடந்துள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் என்பது துறை ரீதியிலான மாற்றம் மட்டும்தான்..

டேவிட்சன் - புகார்
ஆனால் தவறு செய்த அதிகாரிகளுக்கு, முழு அதிகாரங்களை தந்து, இந்த அரசு பாதுகாத்து கொண்டுதான் இருக்கிறது.. மொத்தத்தில் ஒழுக்கமற்ற, தவறான அதிகாரிகளை தலைமையிடத்தில் வைத்திருப்பதுதான் மொத்த பிரச்சினைக்கும் காரணம்" என்றார். திமுக ஆட்சிக்கு வந்ததும், மிஸ்டர் கிளீன் என்பவர்களை மட்டுமே, முக்கிய உயர்பொறுப்பிலும், அதிகாரத்திலும், முதல்வர் ஸ்டாலின் நியமித்திருப்பதாக தகவல்கள் கூறப்பட்டு வந்த நிலையில், பாஜக அந்த விஷயத்திலும் புகார் கொடுக்க முனைந்துவிட்டது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications