ராஜ்ய சபா சீட் கேட்டால் தப்பா.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டேனு சொன்னேனா? கிருஷ்ணசாமி!
சென்னை: என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டேன் என்று சொன்னேனா என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ராஜ்ய சபா சீட் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய கிருஷ்ணசாமி, எல்லா வாய்ப்புகளும் திறந்தே இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்கவில்லை. ஏசி சண்முகம், பாரிவேந்தர், பூவை ஜெகன்மூர்த்தி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்ற போது, கிருஷ்ணசாமி பங்கேற்காதது விவாதமாகியது. இதனால் புதிய தமிழகம் கட்சி என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிவிட்டதா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த நிலையில் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இன்னும் 2 மாதம் காலம் இருக்கும் போதே, களம் சூடுபிடித்துவிட்டது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என்று எந்தக் கட்சியை எடுத்துக் கொண்டாலும், எல்லோரையும் உள்ளடக்கிய அரசியல் முக்கியம். அனைத்து தரப்பினருக்கும் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.
தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக நாங்கள் இதுவரை சிந்திக்கவில்லை. 2019ல் என்டிஏ கூட்டணியில் இருந்தோம்.. 2024ல் அதிமுகவுடன் இருந்தோம். அதனால் நாங்கள் கூட்டணியில் நிச்சயம் இடம்பெறுவோம். என்டிஏ கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம் என்று சொல்லவில்லை. பிரதமர் மோடி பொதுக்கூட்டத்திற்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை.
பாஜக திட்டமிட்டு என்னை அழைக்கவில்லை என்று கருதவில்லை. யாரையும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. நாங்கள் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைக்கும் போது, அவர்களின் வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும். கள அளவில் எங்களுக்கு நல்ல வாக்கு வங்கி இருக்கிறது. இதுவரை தவெக தரப்பில் இருந்து எங்களை அணுகவில்லை.
30 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். எங்கள் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கேட்டால் தப்பா? கடந்த 30 ஆண்டுகளில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்கப்பட்டுள்ளதா? ஆனால் நாங்கள் அப்படி எந்தவொரு நிபந்தனையையும் வைக்கவில்லை. அதேபோல் புதிய தமிழகம் கட்சி கூடுதல் தொகுதிகள் எண்ணிக்கையை கேட்டால் தவறு கிடையாது.
அதேபோல் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டேன் என்று நான் சொன்னேனா? வேறு கூட்டணியை பற்றி யோசிக்க மாட்டோம் என சொன்னேனா? எல்லா வாய்ப்புகளும் திறந்தே இருக்கின்றன. சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications