கிருஷ்ணகிரி ஆணவக்கொலை.. மகனையும், தாயையும் வெட்டிக் கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
சென்னை: கிருஷ்ணகிரியில் சாதி மறுப்புத் திருணம் செய்த மகன் சுபாஷ் மற்றும் தாயை வெட்டிக் கொன்ற தண்டபாணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது மாவட்ட நீதிமன்றம். 2023 ஏப்ரலில் நடந்த இச்சம்பவத்தில் தமது ஊருக்கு வந்த மகனையும், மருமகளையும் அரிவாளால் வெட்டினார் தண்டபாணி. தடுக்க வந்த அவரது தாய் மற்றும் சுபாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சுபாஷ், திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அப்போது உடன் பணிபுரிந்த, வேறு சாதியைச் சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணை அவர் காதலித்துள்ளார். சாதியை காரணம் காட்டி மகனின் காதலுக்கு தண்டபாணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

காதலைக் கைவிடுமாறு சுபாஷிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால், தந்தையின் பேச்சை நிராகரித்த சுபாஷ், கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனுசுயாவை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 15 நாட்களுக்குப் பிறகு, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊரான அருணபதி கிராமத்தில் தனது பாட்டி கண்ணம்மா வீட்டுக்கு சுபாஷ் தனது மனைவியை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார்.
இதை அறிந்து அங்கு சென்ற தண்டபாணி, அரிவாளால் தனது மகன் சுபாஷ், மருமகள் அனுசுயாவை சரமாரியாக வெட்டினார். இதைத் தடுக்க முயன்ற தனது தாய் கண்ணம்மாவையும் தண்டபாணி தாக்கினார். மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில், சுபாஷ் மற்றும் அவரது தாய் கண்ணம்மா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மருமகள் அனுசுயா படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தண்டபாணியை கைது செய்தனர். எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வழக்கு, கொலை வழக்கு, உள்ளிட்ட (307, 302) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சாதி மறுப்புத் திருணம் செய்த மகன் சுபாஷ் மற்றும் தடுக்க வந்த தனது தாய் கண்ணம்மாவை வெட்டிக் கொன்ற தண்டபாணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது மாவட்ட நீதிமன்றம். 2023 ஏப்ரலில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு ஊருக்கு வந்த மகனையும், மருமகளையும் அரிவாளால் வெட்டினார். தடுக்க வந்த அவரது தாய் மற்றும் சுபாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications