நடிகர் விஜய் முதலில் அரசியலுக்கு வரட்டும்! அப்புறம் பேசலாம்! வாய்ப்பை நழுவவிட்ட கே.எஸ்.அழகிரி!
சென்னை: நடிகர் விஜய் முதலில் அரசியலுக்கு வரட்டும், அப்புறம் அது பற்றி பேசலாம் எனக் கூறி தனக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி.
நேற்றைய தினம நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் பேசும் போது காமராஜர் பெயரை குறிப்பிட்டு அவரை பற்றி மாணவர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார். இது போதாதா இந்நேரம் விஜயை கொண்டாடி அவரது கருத்துக்கு வரவேற்பு தெரிவித்திருக்க வேண்டிய காங்கிரஸ் ஏனோ தெரியவில்லை சைலண்ட் மோடில் இருக்கிறது.

இத்தனைக்கும் ஏற்கனவே ராகுல் காந்திக்கும் நடிகர் விஜய்க்கும் நேரடி அறிமுகமும் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் வைத்து நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி பேசியிருக்க வேண்டிய அழகிரி, ஏனோ பேச மறுத்துவிட்டார்.
நடிகர் ரஜினிகாந்தும் இப்படித்தான் அரசியலுக்கு வருவார் என சொன்னார்கள் என்றும் கடைசியில் அவர் வாவில்லை எனவும் அதுபோல் நடிகர் விஜய் தனது அரசியல் வருகை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாத போது அதை பற்றி பேசத் தேவையில்லை எனவும் கூறி கழன்றுகொண்டார் கே.எஸ்.அழகிரி.
நடிகர் விஜய் முதலில் அரசியலுக்கு வரட்டும் அப்புறம் அதை பற்றி பேசலாம் எனத் தெரிவித்துவிட்டார். இதனிடையே தனது கருத்தும் நடிகர் விஜய் கருத்தும் ஒரே மாதிரி இருப்பதாக கூறி கவனம் ஈர்த்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம் எம்.பி.
இதனிடையே அம்பேத்கரை பற்றி மாணவர்கள் படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விஜயின் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வரவேற்பு தெரிவித்திருப்பதுடன் இதற்காக விஜயை கொண்டாடியும் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications