பாஜகவுக்குத் தாவும் கு.க... அதிர்ச்சியில் திமுக.. அறிவாலயத்தில் அவசர ஆலோசனை.. என்ன பேசினாங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் பாஜகவில் இன்று மாலை இணைய இருப்பதாக வெளியான தகவலையடுத்து, உடனடியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான துரைமுருகன், ஆர்எஸ் பாரதி, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த வி.பி. துரைசாமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து வேறு சிலரும் பாஜகவில் இணையலாம் என்று அப்போது கிசு கிசுக்கப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய இருக்கிறார் என்று இன்று காலை ஒரு செய்தி வெளியானது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் இன்று மாலை இணைய இருக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியானது.

Ku.ka. Selvam joins BJP: MK Stalin convened DMK party meeting with top leaders

இதையடுத்து அவசர அவசரமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக்கிய தலைவர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையை திமுக மேற்கொண்டது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது. பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படும் செல்வம் 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தார். கட்சியிலும் உரிய அங்கீகாரம் கிடைத்தது.

சமீபத்தில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ. அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு பதிலாக அந்த இடத்தில் சமீபத்தில் சிற்றரசு நியமனம் செய்யப்பட்டார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக வேண்டும் என்று செல்வம் முயற்சித்துள்ளார். கிடைக்காத காரணத்தினால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவர் பாஜகவுக்கு தாவுகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

திமுகவில் பாஜக மாநில துணைத் தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் இணைய இருக்கிறார் என்று வெளியான செய்திக்கு இடையே திமுகவுக்கு நெருடல் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+