குன்றத்தூரில் "கள்ளாட்டம்" ஆடிய அபிராமி.. பிரியாணி காதலனுடன் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில்! அடக் கொடுமையே
சென்னை: முறைதவறிய பெண்களால், குடும்ப வன்முறைகள் பெருகி கொண்டிருக்கின்றன.. அந்தவகையில், கள்ளக்காதலுக்காக பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த குன்றத்தூர் அபிராமியை எளிதில் மறக்க முடியாது.. பலவருட காலம் சிறையில் உள்ள அபிராமிக்கு இன்று தீர்ப்பாகும்.. தமிழகத்தையே உலுக்கிய குன்றத்தூர் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது.. இவர் முதன்முலில் போலீசில் எப்படி சிக்கினார்? குழந்தைகளின் படுகொலை எப்படி வெளிச்சத்துக்கு வந்தது?
குன்றத்தூர் என்றாலே அபிராமிதான் நினைவுக்கு வருகிறார்.. குன்றத்தூரை சேர்ந்த அபிராமிக்கு இப்போது 37 வயதாகிறது.. டிக்டாக் செயலி பிரபலமானபோதுதான், அதன்மூலம் அபிராமியும் பிரபலமடைந்தவர்.., இவரது கணவர் பெயர் விஜய். தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.. இவர்களுக்கு அஜய், கார்னிகா ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர்.

அபிராமி வசிக்கும் பகுதியிலேயே பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. குழந்தைகளுக்கு பிரியாணி பிடிக்கும் என்பதால், அடிக்கடி தன்னுடைய குடும்பத்தினருடன் இந்த பிரியாணி கடைக்கு சென்று வந்தார் அபிராமி.. ஒருகட்டத்தில் போன் செய்தால், டோர் டெலிவரி செய்து, பிரியாணியை வரவழைத்து சாப்பிட்டுள்ளனர்.
வீட்டுக்கே வந்த பிரியாணி
அப்படி வீட்டுக்கு பிரியாணி தரும் ஊழியர்தான், சுந்தரம்.. அப்போது வீட்டுக்கு வரும்போதெல்லாம் அபிராமி - சுந்தரம் இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது.. கணவருக்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்..
சில நாட்கள் கழித்து விஜய்யின் காதுகளுக்கு இது எட்டியதுமே, குடும்பத்தில் தகராறு வெடித்தது.. சுந்தரத்துடன் பேசக்கூடாது, பழகக்கூடாது, 2 குழந்தைகளை குழந்தைகளை சரியாக கவனித்து கொள் என்று அபிராமிக்கு கணவர் அட்வைஸ் தந்தார்.. இதனால் சுந்தரத்துடன் முன்புபோல போனில் கூட பேச முடியாமல் அபிராமி தவித்தார்..
சுந்தரத்துடன் உறவு கொள்ள, இந்த குழந்தைகள்தான் தடை என்றால், அந்த குழந்தைகளையே கொல்ல முடிவெடுத்தார் அபிராமி.. இதற்காக கள்ளக்காதலனிடம் சொல்லி தூக்க மாத்திரையை, வாங்கி வர சொல்லி, அவைகளை பாலில் கலந்தார் அபிராமி.. குழந்தைகளை இரவு தூங்க வைக்கும்போது, மாத்திரை பாலினை குடிக்க வைத்தார்.. குழந்தைகளை கழுத்தையும் நெறித்துவிட்டார்..
சமார்த்தியமான பதில்
எப்போதுமே விஜய் வேலைக்கு கிளம்பி செல்லும்போது குழந்தைகள் டாடா சொல்வார்களாம்.. ஆனால், மறுநாள் குழந்தைகள் இன்னும் விழித்து கொள்ளாததால், விஜய் அவர்களை எழுப்ப சென்றுள்ளார்..
"குழந்தைகளை எழுப்பினால் நாம் சிக்கிவிடுவோம்" என்று கருதிய அபிராமி, தூங்கும் குழந்தைகளை ஏன் எழுப்பறீங்க என கேட்டு, விஜய்யை சமாளித்து, அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்..
குழந்தைகள் பிணமாக கிடக்கிறார்களே என்ற ஈவு, இரக்கம் ஏதுமின்றி, பிறகு தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு, பைக்கில் சுந்தரத்துடன் கிளம்பிவிட்டார்.. அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த விஜய், அப்போதுதான், 2 குழந்தைகளும் பேச்சு மூச்சின்றி இருந்ததை கண்டு, தரையில் புரண்டு கதறி அழுத விஜய்,
கதறிய கணவர்
இறுதியில் குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.. இரு குழந்தைகளின் சடலத்தையும் பிரேதப் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கை வந்த போதுதான் அபிராமி, குழந்தைகளை கொன்ற விவகாரம் தெரியவந்தது. இந்த நிலையில் அபிராமியை தேடி வந்த நிலையில் கள்ளக்காதலன் சுந்தரத்துடன் தப்பி செல்ல கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பைக்கை விட வந்திருந்தார்.
அப்போதுதான் அவரை போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்து புழலில் சிறையில் அடைத்தனர். ஆனால், பச்சிளம் குழந்தைகளை கொன்ற விதம்குறித்து அன்று அபிராமி தந்திருந்த வாக்குமூலம் தமிழகத்தையே நிலைகுலைய வைத்தது.. கள்ளக்காதல் என்றாலே அபிராமி என்று சொல்லுமளவுக்கு, குன்றத்தூர் அபிராமி சம்பவம் தமிழகத்தில் நிலைத்து விட்டது..!!












Click it and Unblock the Notifications