25 வருஷமாச்சு.. இன்னும் கண்ணைப் பார்த்தா வெக்கம் வெக்கமா வருது.. குஷ்புவின் கலக்கல் டிவீட்!
Recommended Video
சென்னை: குஷ்புவும், சுந்தர் சியும் திருமணம் ஆகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். ட்விட்டரில் இருவரும் இருக்கும் புகைப்படங்களை குஷ்பு மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக இந்தி படங்களில் அறிமுகமாகி கடந்த 80, 90 களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
தமிழில் மட்டும் 100 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். ஆக மொத்தம் அனைத்து மொழிகளிலும 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது இவருக்கு கோயில் கட்டினர்.

திருமணம்
முதல்முறையாக இந்திய நடிகை ஒருவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டியது குஷ்புவுக்கு மட்டும்தான். அதுவும் 2005-இல் இடிக்கப்பட்டது. அது போல் தென்னிந்திய உணவான இட்லிக்கு குஷ்பு இட்லி என பெயரிடப்பட்டது. இன்று வரை அந்த பெயர் நிலைத்திருக்கிறது. அதோடு குஷ்பு ஜம்கி, குஷ்பு புடவைகள், குஷ்பு சர்பத், குஷ்பு காபி என ஏராளமான உணவு பொருட்கள் வந்துவிட்டன. இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு உள்ளத்தை அள்ளித்தா படத்தை இயக்கிய சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குரல்
இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா ஆகிய இரு மகள்கள் உள்ளன. இவர்களது பெயரில் அவ்னி சினிமேக்ஸ் என தயாரிப்பு நிறுவத்தை தொடங்கியுள்ளார். இவர் சென்னையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்.

ட்விட்
யாராவது தன்னை அவதூறாக ட்வீட் செய்தால் அவரை அதே வார்த்தைகளால் திட்டி தீர்த்துவிடுவார். திமுகவில் இருந்த குஷ்பு சில மனஸ்தாபம் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அது முதல் பிரதமர் மோடியையும் பாஜக தலைவர்களையும் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் இன்றுடன் குஷ்புவுக்கும் சுந்தர் சிக்கும் திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
|
நீங்கள்தான்
அவர் கூறுகையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ள உங்கள் விருப்பத்தை கூறினீர்கள். இத்தனை ஆண்டுகளில் ஒன்றும் மாறவில்லை. நமது புகைப்படங்கள்தான் மாறின. ஆனால் அதே அன்புடன்தான் இன்றும் இருக்கிறேன். இன்றும் உங்கள் கண்களை பார்த்தால் வெட்கம் வருகிறது. நீங்கள் சிரித்தால் எனது முழங்கால் பலவீனமாக இருக்கிறது. நீங்கள்தான் எனக்கு எல்லாம் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications