காங்கிரஸில் இருந்த போது மனசாட்சியே இல்லாமல் பாஜகவை விமர்சித்தேனே!.. குஷ்பு உருக்கம்
சென்னை: காங்கிரஸில் இருந்த போது மனசாட்சியே இல்லாமல் பாஜகவை விமர்சித்தேன் என சென்னையில் கமலாலயத்தில் குஷ்பு உருக்கமாக தெரிவித்தார்.
Recommended Video
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குஷ்பு நேற்று அதிரடியாக பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவர் சென்னைக்கு திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையடுத்து தமிழக பாஜக தலைமையிடமான கமலாலயத்திற்கு குஷ்பு வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

6 ஆண்டுகள்
அவர் கூறுகையில், நான் நடிகை என்பது இந்த 6 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியவில்லை. இந்த 6 ஆண்டுகளில் எத்தனை கட்சி கூட்டங்களுக்கு நான் சென்றிருப்பேன். அப்போதெல்லாம் தெரியவில்லையா?

கண்கள்
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, மேற்கு வங்கம் முதல் பீகார் வரை ஆந்திரா முதல் தெலுங்கானா வரை என பல இடங்களுக்கு சென்று காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரசாரங்களை செய்த போது நான் ஒரு நடிகை என்பது அவர்களின் கண்களுக்கு தெரியவில்லையா.

பாஜக
இதிலிருந்தே அவர்களின் சிந்தனை எத்தனை சிறுமையானது என்பதை தெரிந்து கொள்ளலாம். தமிழக பாஜக தலைவர் எல் முருகன் எடுத்த முயற்சியால்தான் நான் பாஜகவில் இணைந்தேன். காங்கிரஸ் கட்சியில் இருக்கிறவர்களுக்கும் கட்சியை விட்டு செல்கிறவர்களுக்கும் மரியாதை இல்லை.

பழி
காங்கிரஸ் கட்சியில் இருந்த போது பாஜகவை மனசாட்சியின்றி விமர்சித்துவிட்டேன். எல்லா திட்டங்களையும் காங்கிரஸ் கொண்டு வந்துவிட்டு கடைசியில் பழியை பாஜக மீது போடுவது என்ன நியாயம். பிரதமர் மோடி நிறைய நல்ல பல திட்டங்களை நாட்டுக்கு செய்துள்ளார் என்றார் குஷ்பு.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications