எந்த காலத்துல மோடி பதில் சொல்லியிருக்காரு.. ஜஸ்ட் வெயிட்.. புது நாடகத்துடன் அமித்ஷா வருவார்- குஷ்பு
Recommended Video
சென்னை: எந்த காலத்தில் எதிர்க்கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு மோடி பதில் அளித்திருக்கிறார்? கொஞ்சம் பொறுங்கள், புதிய டிராமாவுடன் அமித்ஷா பதில் அளிப்பார் என்று குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். அச்சமயம் இம்ரானிடம் டிரம்ப் கூறுகையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஜி 20 மாநாட்டில் நானும் இந்திய பிரதமர் மோடியும் சந்தித்து பேசினோம்.
காஷ்மீர் பிரச்சினையில் நீங்கள் மத்தியஸ்தம் செய்வீர்களா என மோடி என்னிடம் கேட்டார். அதற்கு நானோ என்னால் மத்தியஸ்தம் செய்து வைக்க முடியும் என நீங்கள் நினைத்தால் நான் அதற்கு தயார் என தெரிவித்தேன் என்றார்.

அமெரிக்கா
இரு நாட்டு நல்லுறவு விவகாரத்தில் மூன்றாவதாக ஒரு நாடு செல்லக் கூடாது என்ற போதிலும் டிரம்ப் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து காஷ்மீர் விவகாரமானது இந்தியா, பாகிஸ்தான் இடையேயான இரு தரப்பு விவகாரமாகும். இதில் அமெரிக்கா எப்படி தலையிட முடியும்.

ஜெய்சங்கர்
பிரதமர் ஏன் டிரம்ப்பிடம் அவ்வாறு கேட்டார் என எதிர்க்கட்சிகள் கேள்விக் கணைகளால் துளைத்தன. அப்போது வெளியுறவுத் துறை செயலாளர் ரவீஷ் குமார் கூறுகையில் டிரம்ப்பிடம் மோடி அவ்வாறு கேட்கவில்லை என்றார். அது போல் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அவ்வாறே தெரிவித்தார்.

3 முறை ஒத்திவைப்பு
மோடி சொல்லாத ஒரு விஷயத்தை அவர் கூறியதாக டிரம்ப் கூறியதை அவர் ஏன் மறுக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை 3 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
|
ஒரு முறை சந்திப்பு
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது டுவிட்டரில் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு முறை கூட எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்ததில்லை. லோக்சபா தேர்தலின் போது ஒரே ஒரு முறை செய்தியாளர்களை சந்தித்தார்.

வருவார்
அப்போது கூட எல்லா கேள்விகளுக்கும் அமித்ஷாவே பதில் அளித்தார். அவ்வாறு இருக்க அமெரிக்க அதிபர் பேச்சுக்கு மட்டும் பதில் சொல்லிவிடுவாரா என்ன? காத்திருங்கள், இதற்கு புதிய நாடகத்துடன் அமித்ஷா வந்து பதில்சொல்வார் என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications