போலீஸ் வேனில் குஷ்பு ஆவேசம்.. "கடைசி மூச்சு இருக்கும் வரை விடமாட்டேன்.." விசிகவுக்கு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடைசி மூச்சு இருக்கும் வரை, பெண்களின் கண்ணியத்தை காக்க போராடுவோம் என்று பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Kushboo Arrested | நடுரோட்டில் கைது செய்யப்பட்ட குஷ்பு

    மனுஸ்மிருதி பற்றியும் அதில் பெண்களைப்பற்றி கூறியுள்ளதாக உள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றியும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசினார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

    இதை பேச்சு பெண்களின் கண்ணியத்தைக் எதிராக இருப்பதாக கூறி சைபர் கிரைம் காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    குஷ்பு போராட்டம்

    குஷ்பு போராட்டம்

    பாஜகவினர் மட்டும் வலதுசாரி அமைப்பினர் திருமாவளவனுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். சிதம்பரம் நகரில் நேற்று திருமாவளவனுக்கு எதிராக குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிரணியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்த முற்பட்டனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்த உள்ளதாக குஷ்பு அறிவித்திருந்தார்.

    குஷ்பு கைது

    குஷ்பு கைது

    காவல்துறையினர் தடை விதித்த போதிலும் அதை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறியிருந்தார். இதனிடையில் சென்னையிலிருந்து சிதம்பரத்துக்கு இன்று காலை தனது காரில் சென்றபோது முட்டுக்காடு அருகே போலீசார் வழிமறித்து நிறுத்தி அவரை கைது செய்தனர்.

    காவல்துறை வேனில் குஷ்பு

    குஷ்புவை கைது செய்த காவல்துறையினர் பெண் போலீசார் உதவியுடன் போலீஸ் வேனில் ஏற்றி அனுப்பி வைத்தனர். போலீஸ் வேனில் இருந்தபடி தனது செல்போன் மூலமாக புகைப்படம் எடுத்துள்ளார் குஷ்பு. அத்துடன் சில கருத்துக்களை அவர் ட்வீட் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: நான் கைது செய்யப்பட்டுள்ளேன். காவல் துறையின் வேன் மூலமாக அழைத்துச் செல்லப்படுகிறோம். ஆனால் பெண்களின் கண்ணியத்தை காப்பாற்றுவதற்காக நாங்கள் கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவோம். பிரதமர் நரேந்திரமோடி எப்போதுமே பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசுபவ.ர் பேசியபடியே நடப்பவர். எனவே சில விஷமிகளின் கொடுமைகளுக்கு நாங்கள் பணிந்து போக மாட்டோம். பாரத் மாதா கி ஜெய் என்று கூறியுள்ளார்.

    பயந்துவிட்டீர்கள்

    மற்றொரு டுவிட்டர் பதிவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பயந்து போய் விட்டனர். நீங்கள் எனது கைதால் சந்தோஷப்பட வேண்டாம். இது உங்களின் தோல்வி. எங்களுடைய பலம் என்ன என்பது தெரிந்துதான் போலீசார் கைது செய்துள்ளனர். நாங்கள் இதிலிருந்து பின் வாங்க போவது கிடையாது. இந்த மண்ணின் மகள் ஒவ்வொருவரின் மாண்பையும் காப்பாற்றுவதற்கு பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுப்பார். பெண்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிந்திராத ஒன்றாக இருக்கிறது. இவ்வாறு குஷ்பூ ட்விட் செய்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+