வால்பாறையில் அப்பா, அம்மா இல்லாத நேரம்.. நண்பனை பார்க்க போன போது.. செய்யக்கூடாத வேலை

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வருபவர் உதயன் என்பவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆவார், இவர் மனைவியுடன் தனது மகளை காண வெளியூருக்கு சென்று இருக்கிறார். அப்போது வீட்டில் அவரது மகன் நிதீஷ்குமார் மட்டும் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு அவருக்கு தெரிந்தவர்கள் வந்து நீண்ட நேரம் பேசியுள்ளனர், இந்நிலையில் வந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் செய்த வேலையால் இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்கள்.

திருடர்கள் என்பவர்கள் வழிபறி செய்யும் மர்ம நபர்களாகவே இருப்பார்கள் என்று அவசியமில்லை.. நமக்கு நன்கு பழக்கம் ஆனவர்களே கூட நமக்கும் தெரியாமல் திருட வாய்ப்பு அதிகம்.வீடுகளில் சாவி எங்கு இருக்கும் என்பதை அறிந்தவர்களே கூட திருடுவது அதிகமாக நடக்கிறது. வீட்டின் உரிமையாளரை வாடகைக்கு குடிவைத்தவர் வீட்டில் திருடியது நடந்துள்ளது. அதேபோல் வாடகைக்கு குடியிருந்தவரே வீட்டின் உரிமையாளர் வீட்டில் திருடுடியது நடந்துள்ளது. சில நேரங்களில் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், நண்பர்களே கூட அப்படி திருடுவது நடக்கும். அப்படித்தான் வால்பாறையில் நடந்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

A Twist for Friends Who Coveted Gold Jewelry at a Teacher s Home in Valparai

கோவை மாவட்டம் வால்பாறை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உதயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆவார், இவர் மனைவியுடன் தனது மகளை காண வெளியூருக்கு சென்றுள் அப்போது வீட்டில் அவரது மகன் நிதீஷ்குமார் மட்டும் இருந்துள்ளார். நிதீஷ்குமாருக்கு நன்கு பழக்கமான சேக்கல் முடி எஸ்டேட் பகுதியை சேர்ந்த துர்காதேவியும், அவருக்கு தெரிந்த பொள்ளாச்சி நேதாஜி நகரை சேர்ந்த அஸ்கார் அலியும் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டுக்கு வெளியே நீண்ட நேரம் 3 பேரும் பேசிக் கொண்டிருந்துள்ளார்கள்.

பின்னர் சிறிது நேரம் கழித்து நிதீஷ்குமாரும், அஸ்கார் அலியும் பேசிக் கொண்டிருந்த போது துர்காதேவி மட்டும் வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் வெளியூருக்கு சென்றிருந்த நிதீஷ்குமாரின் பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். கல்லூரி மாணவரான நிதீஷ்குமார் தான் படிக்கும் பெங்களூருக்கு போய் விட்டார். வெளியூரில் இருந்து வந்த ஆசிரியர் உதயன் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை காணவில்லை என தனது மகன் நிதீஷ்குமாரிடம் கேட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து நிதீஷ்குமாரை வரச் சொல்லி வால்பாறை போலீசில் புகார் கொடுத்தார்.

இது குறித்து வால்பாறை போலீசார் நிதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வீட்டுக்கு யார் வந்து சென்றார்கள் என்று கேட்டனர். அப்போது துர்காதேவி மற்றும் அஸ்கார் அளி வந்து சென்றதை தெரிவித்துள்ளார். பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்படை அமைத்து துர்காதேவி (25), அஸ்கார் அலி (30), அவர்களுடன் இருந்த துளசிமணி (38) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் துர்காதேவி, அஸ்கார் அலி இருவரும் நகையை திருடியது தெரியவந்தது. இவர்களிடமிருந்து திருடப்பட்ட 20 பவுன் நகையை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+