ஹஹாஹா.. 'உங்களை பார்த்தா பாவமா இருக்கு'.. பல்பு வாங்கிட்டாங்க.. குஷ்பு செம்ம ரியாக்சன்

Subscribe to Oneindia Tamil

சென்னை : "நீங்களே ஒரு கண்ணு காது மூக்கு போட்டு ஒரு பொம்மை உருவாகி, நீங்களே feel பண்ணினா எப்படி boss?? உங்களை பார்த்தா பாவமா இருக்க. பல்பு வாங்கிட்டாங்க என்று குஷ்பு கூறியுள்ளார்.

சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட குஷ்புக்கு வாய்ப்பு கிடைக்காததை கூறி பலர் கிண்டலடித்து வருவதற்குத்தான் குஷ்பு இப்படி பதில் அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு, தனக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார். இதை வெளிப்படையாக குஷ்பு அறிவித்த போது காங்கிரஸ் கட்சி சமாதானம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

பாஜக உறுதி

பாஜக உறுதி

அதேநேரம் பாஜக, குஷ்புவை சேருமாறு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது பாஜகவில் இணைந்தால், முக்கிய பொறுப்பு அல்லது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்று குஷ்பு கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. அதற்கான உத்தரவாதம் பாஜகவிடம் கிடைத்த பிறகே குஷ்பு, அக்கட்சியில் இணைந்தார் என்றும் அப்போது தகவல்கள் உலா வந்தன.

வாக்கு கேட்டார்

வாக்கு கேட்டார்

இந்நிலையில பாஜக குஷ்புக்கு எந்தவித பொறுப்பும் தரவில்லை. அதேநேரம் தேர்தலில் போட்டியிட சீட் தருமா, தராதா என்ற கேள்வியும் எழுந்தது. ஒரு கட்டத்தில் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் பரவின. உதயநிதி அங்குதான் போட்டியிடுவார் என்றும் இன்றும் நம்பப்படுகிறது. அங்கு குஷ்பு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில் பிரச்சாரத்தை தொடங்கினார். தீவிர வாக்கு சேகரிக்க தொடங்கினார்-

குஷ்புக்கு இல்லை

குஷ்புக்கு இல்லை

இதனிடைய திடீர் திருப்பமாக நேற்று அதிமுக கூட்டணி தொகுதி பட்டியலில் சேப்பாக்கம் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பாஜகவிற்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் குஷ்புக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க பாஜக மறுத்துவிட்டதாக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகிறது. குஷ்புவை பலரும் சமூக ஊடகங்களில் கிண்டல் அடித்து மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். குஷ்புக்கு சீட் வழங்கப்பட உள்ளதா இல்லையா என்பதை இன்னமும் பாஜக அறிவிக்கவில்லை. பாஜகவிற்கு சேப்பாக்கம் ஒதுக்கவில்லையே தவிர, பக்கத்து தொகுதியான ஆயிரம் விளக்கு தரப்பட்டுள்ளது. எனவே எந்த முடிவுக்கு வர முடியாத நிலை உள்ளது.

பல்பு வாங்கிட்டாங்க

பல்பு வாங்கிட்டாங்க

இதனிடையே தன்னை பற்றி வரும் மீம்ஸ்களுக்கும், கிண்டல்களுக்கும் பதில் அளித்துள்ள குஷ்பு, "ஹஹாஹாஹாஹ .. என்னைப் பற்றி ஒரு பகுதி பத்திரிகைகள் போட்டியிடவில்லை ஏன்? என கேட்கின்றன. நான் ஒரு போதும் போட்டியிடவில்லை என்று கூறவில்லை . கட்சியும் இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் நீங்களே ஒரு கண்ணு காது மூக்கு போட்டு ஒரு பொம்மை உருவாகி, நீங்களே feel பண்ணினா எப்படி boss?? உங்களை பார்த்தா பாவமா இருக்கு. பல்பு வாங்கிட்டாங்க" என்று கிண்டலாக கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+